• சிக்காத சிறுத்தை: தயாராகும் 10 சென்சார் கேமராக்கள்; அதிகாரிகளின் அடுத்த மூவ்!


மயிலாடுதுறை நகரில் கடந்த 2 -ம் தேதி இரவு சிறுத்தை ஒன்று  நடமாடிய வீடியோ காட்சிகள் வெளியான நிலையில் சிறுத்தையை பிடிப்பதற்கு வனத்துறை தீயணைப்புத்துறை காவல்துறை இணைந்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். நேற்று சிறுத்தை பதுங்கி இருப்பதாக கருதப்பட்ட கூறைநாடு தெற்கு சாலிய தெரு , செங்கழநீர் பிள்ளையார் கோயில் தெரு,  உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில்  வலைகள் கயிறுகளுடன் தீவிரமாக சிறுத்தையை  தேடி வந்தனர். இந்நிலையில் இன்று அதிகாலை ஆரோக்கியநாதபுரம் பகுதியில் சிறுத்தை பதுங்கி உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் படிக்க..



  • திமுக முன்னாள் சபாநாயகர் வீட்டில் வருமானவரித்துறை சோதனை; தொண்டர்கள் கூடியதால் பரபரப்பு


முன்னாள் சபாநாயகரும் திமுக கிழக்கு மாவட்ட செயலாளருமான ஆவுடையப்பன் இல்லத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். தமிழ்நாட்டின் முன்னாள் சபாநாயகரும் திமுகவின் கிழக்கு மாவட்ட செயலாளருமான ஆவுடையப்பன் இல்லத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். பாளையங்கோட்டையில் உள்ள அவரது அலுவலகத்தில் சோதனை நடைபெற்று வருவதால், அப்பகுதியில் திமுக கட்சியினர் அதிக அளவில் குவிந்துள்ளனர். மேலும் அதிகமான காவல் துறையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் படிக்க..



  • விவிபேட் வழக்கில் திருப்பம்.. தேர்தலுக்கு முன்னதாக விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புதல்!


கடந்த சில ஆண்டுகளாகவே மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் தொடர்பாக பல சந்தேகங்கள் எழுப்பப்பட்டு வருகிறது. குறிப்பாக, அதன் நம்பகத்தன்மை குறித்து எதிர்க்கட்சிகள் பல கேள்வி எழுப்பி வருகின்றன. தேர்தல் நெருங்கும் சூழலில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் தொடர்பான வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரிக்க ஒப்பு கொண்டுள்ளது. கடந்த 1982ஆம் ஆண்டுதான், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் இந்தியாவில் முதன்முறையாக பயன்படுத்தப்பட்டது. மேலும் படிக்க..



  • நெருங்கும் தேர்தல்! அமித் ஷாவின் தமிழ்நாடு பயணம் திடீர் ரத்து - பரபர பின்னணி என்ன?


பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வரும் 19ஆம் தேதி தொடங்க உள்ளது. கடந்தமுறை போன்று இந்த முறையும், 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட உள்ளது. அதன்படி, தமிழ்நாட்டுக்கு முதல் கட்டத்திலேயே மக்களவை தேர்தல் நடத்தப்பட உள்ளது. மக்களவை தேர்தலுடன் விளவங்கோடு தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடத்தப்பட உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவை தொகுதிகளில் மொத்தம் 950 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அதிகபட்சமாக, கரூர் மக்களவை தொகுதியில் 54 பேர் களம் காண்கின்றனர். மேலும் படிக்க..



  • தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் திறக்க கர்நாடக அரசு மறுப்பு; கூட்டத்தில் என்ன நடந்தது?


தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் திறக்க கர்நாடக அரசு மறுப்புதாக, டெல்லியில் நடைபெற்ற காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டத்தில், தெரிவித்துள்ளது. தமிழ்நாடு, கர்நாடகா இடையே காவிரி நீர் பிரச்னை தீர்க்கப்படாத ஒன்றாகவே உள்ளது. இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி காவிரி ஒழுங்காற்றுக்குழு மற்றும் காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் காவிரி ஒழுங்காற்று குழு பெங்களூருவை தலைமையிடமாக கொண்டும், மேலாண்மை ஆணையம் டெல்லியை தலைமையிடமாக கொண்டும் செயல்பட்டு வருகிறது. மேலும் படிக்க..