முன்னாள் சபாநாயகரும் திமுக கிழக்கு மாவட்ட செயலாளருமான ஆவுடையப்பன் இல்லத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்
தமிழ்நாட்டின் முன்னாள் சபாநாயகரும் திமுகவின் கிழக்கு மாவட்ட செயலாளருமான ஆவுடையப்பன் இல்லத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
பாளையங்கோட்டையில் உள்ள அவரது அலுவலகத்தில் சோதனை நடைபெற்று வருவதால், அப்பகுதியில் திமுக கட்சியினர் அதிக அளவில் குவிந்துள்ளனர். மேலும் அதிகமான காவல் துறையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்
முன்னாள் சட்ட பேரவை தலைவருமான ஆவுடையப்பன் அலுவலகத்திலும் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளுக்கான மக்களவைக்கான தேர்தல் வரும் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், தேர்தலுக்கு சில நாட்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தேர்தல் நேரத்தில், திமுகவைச் சேர்ந்த ஆவுடையப்பனுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினரின் சோதனை பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
இது குறித்து எதிர்க்கட்சியினர் கருத்து தெரிவிக்கையில், தேர்தல் நேரங்களில் எதிர்க்கட்சிகளை ஒடுக்கவும், மக்களிடம் எதிர்க்கட்சிகள் மீது தவறான எண்ணத்தை உருவாக்க ஆளும் பாஜக முயற்சி செய்கிறது. அரசு இயந்திரங்களை தவறான நோக்கத்தில் பயன்படுத்துகிறது. இது முதல் முறையல்ல, இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில், இதே யுக்தியைத்தான் ஆளும் பாஜக அரசு மேற்கொள்கிறது என்று கருத்து தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், முன்னாள் சபாநாயகரும் திமுக கிழக்கு மாவட்ட செயலாளருமான ஆவுடையப்பன் இல்லத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனையால், அப்பகுதியில் திமுக தொண்டர்கள் குவிந்தனர். மேலும், அப்பகுதியில் காவல்துறையினரும் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். திடீர் சோதனையில் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Also Read: Constitution of India: அரசியலமைப்பு சட்டம் குறித்து ஏன் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும்?