- அரசியலமைப்பு சட்டத்தை கிழித்து எறிய நினைக்கிறது பாஜக.. சத்தீஸ்கரில் ராகுல் காந்தி ஆவேசம்
சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூர் மக்களவை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், மத்திய அரசையும், பிரதமர் மோடியையும் கடுமையாக விமர்சித்து பேசினார். ராகுல் காந்தி பேசியதாவது, “இந்த மக்களவை தேர்தல் அரசியல் சாசனம், ஜனநாயகம், இடஒதுக்கீடு ஆகியவற்றை காப்பாற்றும் தேர்தல். இந்த போராட்டம் கருத்தியல் போராட்டம். ஒரு பக்கம் காங்கிரஸ் கட்சியும் இந்திய கூட்டணியும் - மற்றொரு பக்கம் பாஜக. மேலும் படிக்க..
- ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம்.. சிபிசிஐடி வழக்குப்பதிவு..
தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி ஒரே கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற்றது. இதற்கான ஆயத்த பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வந்தது. சோதனை சாவடிகள் மற்றும் பறக்கும் படையினர் மூலம் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டு வந்தது. அப்போது ஏப்ரல் 6 ஆம் தேதி சென்னையில் இருந்து நெல்லை நோக்கிச் சென்ற ரயிலில் உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ.4 கோடி எடுத்துச் செல்லப்பட்டது தெரிய வந்தது. இதனால் அந்த பணத்தை பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் படிக்க..
- எடிட் செய்யப்பட்ட அமித் ஷா வீடியோ? தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டிக்கு சம்மன்!
எடிட் செய்யப்பட்ட அமித் ஷா வீடியோவை பகிர்ந்ததாக தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டிக்கு டெல்லி காவல்துறை சம்மன் அனுப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உச்சக்கட்ட பரபரப்புக்கு மத்தியில் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நடந்து வருகிறது. தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க பாஜக பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. குறிப்பாக, தென் மாநிலங்களில் பாஜக தீவிரமாக வேலை செய்து வருகிறது. மேலும் படிக்க..
- ஆம் ஆத்மி பரப்புரை பாடலுக்கு தேர்தல் ஆணையம் தடை! எதற்காக? அப்படி என்ன இருக்கிறது?
தேர்தல் வழிகாட்டுதல் நெறிமுறைகளை மீறியதாக ஆம் ஆத்மியின் தேர்தல் பிரச்சாரப் பாடலான 'ஜெயில் கா ஜவாப், வோட் சே டெங்கே' பாடலுக்கு இந்திய தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. மேலும், இப்பாடலை மாற்றியமைக்குமாறு ஆம் ஆத்மி கட்சிக்கு தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது. கடந்த 25 ஆம் தேதி, டெல்லியில் மையமாக கொண்டு செயல்படும் ஆம் ஆத்மியின் பரப்புரை பாடலான 'ஜெயில் கா ஜவாப், வோட் சே டெங்கே' வெளியானது. சுமார் 2 நிமிடம் கொண்ட இப்பாடலை, ஆத்மி கட்சியை சேர்ந்த எம்எல்ஏ திலீப் பாண்டே எழுதியுள்ளார். மேலும் படிக்க..
- வருகிறது வந்தே மெட்ரோ.. சென்னை - திருப்பதி.. குறையும் பயண நேரம்.. எங்கெல்லாம் தெரியுமா?
வந்தே பாரத் ரயில்கள் சுமார் 1,000 கிலோ மீட்டருக்கும் அதிகமான தூரங்கள் உள்ள வழித்தடங்களில் இயக்கப்படுகிறது. இதனால் அதிக தூரமுள்ள உள்ள இடங்களின் பயணம் நேரமானது குறைந்துள்ளது. இந்நிலையில் குறைந்த தூரங்களுக்கு இடையேயான இடங்களை இணைக்கும் வகையில், வந்தே மெட்ரோ திட்டத்தை கொண்டுவர இந்திய ரயில்வே திட்டமிட்டுள்ளது. மேலும் படிக்க..