• உஷார் மக்களே! 18 மாவட்டங்களில் கொளுத்தப்போகும் வெயில்.. எச்சரிக்கும் வானிலை!


காலநிலை மாற்றம் மற்றும் கோடை காலம் என்பதால் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டில் ஏப்ரல் மாதம் தொடங்கியது முதல் வெப்பநிலை அதிகரித்து வருகிறது. வழக்கமாக மே மாதம் அக்னி நட்சத்திரத்தின் போது 40 டிகிரி செல்சியஸ் கடந்து பதிவாகும் வெப்பநிலை தற்போது ஏப்ரல் மாதம் முதலே பல்வேறு மாவட்டங்களில் பதிவாகி வருகிறது. குறிப்பாக நேற்று முன் தினம் இந்தியாவில் பதிவாக அதிகபட்சமான வெப்பநிலையில் சேலம் மூன்றாவது இடம் பிடித்துள்ளது. அதாவது 108 டிகிரி பாரன்ஹீட் பதிவாகி சேலம் 3வது இடத்திலும், 109 டிகிரி பாரன்ஹீட் பதிவாகி ஒடிசா 2வது இடத்திலும், 110 டிகிரி பாரன்ஹீட் பதிவாகி ஆந்திரா முதல் இடம் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் படிக்க..



  • நமது முன்னுரிமைகள் மானுடத்தை மையமாகக் கொண்டதாக இருக்க வேண்டும் - குடியரசுத் தலைவர்


டேராடூனில் உள்ள இந்திரா காந்தி தேசிய வன அகாடமியில் இன்று (ஏப்ரல் 24, 2024) நடைபெற்ற விழாவில் இந்திய வனப் பணியின் (2022 பிரிவு) பயிற்சி அதிகாரிகள் இடையே குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு உரையாற்றினார். அப்போது பேசிய குடியரசுத் தலைவர்,  காடுகளின் முக்கியத்துவத்தை மறந்து மனித சமுதாயம் தவறு செய்து வருகிறது. காடுகள் உயிர்  அளிப்பவை. காடுகள் பூமியில் உள்ள உயிரினங்களைப் பாதுகாக்கிறது. மனிதனை மையமாகக் கொண்ட வளர்ச்சியின் காலமான மானுடவியல் பற்றி இன்று நாம் பேசுகிறோம். இந்த காலகட்டத்தில், வளர்ச்சியுடன் பேரழிவு விளைவுகளும் ஏற்பட்டுள்ளது. மேலும் படிக்க..



  • பெற்றோரின் சொத்துகளை பெற வரியா? காங்கிரஸ் தேர்தல் அறிக்கை குறித்து பிரதமர் சொன்னது உண்மையா?


பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் மக்களவை தேர்தல் நடந்து வருகிறது. கடந்த 19ஆம் தேதி, முதற்கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்த நிலையில், நாளை மறுநாள் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடக்க உள்ளது. கேரளா, கர்நாடகா உள்பட 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 89 தொகுதிகளுக்கு இரண்டாம் கட்ட வாக்குப்பதிவில் தேர்தல் நடைபெற உள்ளது. இப்படிப்பட்ட சூழலில் நாளுக்கு நாள் அரசியல் சர்ச்சை வெடித்த வருகிறது. கடந்த இரண்டு நாள்களாக இஸ்லாமியர்கள் குறித்து பிரதமர் மோடி தெரிவித்து கருத்து பெரும் பரபரப்பை கிளப்பியது. மேலும் படிக்க..



  • தேர்தல் பரப்புரையில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி.. என்னாச்சு?


 மகாராஷ்டிரா மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி மயங்கி விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நாட்டை அடுத்த 5 ஆண்டுகளுக்கு ஆளப்போவது யார் என்பதை தீர்மானிக்கும் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் கடந்த 19ஆம் தேதி தொடங்கியது. முதற்கட்டமாக 102 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்த நிலையில், இரண்டாம் கட்டமாக 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 89 தொகுதிகளுக்கு நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. மேலும் படிக்க..