• வாக்குச்சாவடியில் ஓட்டு போட கூட்டம் இருக்கா? அறிந்துகொள்ள புதிய வசதி!


மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடக்கும் நிலையில் தேர்தல் ஆணையம் சார்பில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட 21 மாநிலங்களில் 102 தொகுதிகளில் முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சியினர் மேற்கொண்டு வந்த தீவிர வாக்கு சேகரிப்பு நேற்று முன்தினம் முடிந்தது. மேலும் படிக்க..



  • இந்திய கடற்படையின் புதிய தளபதியாக தினேஷ் கே திரிபாதி நியமனம் - யார் இவர்?


இந்திய கடற்படையின் தளபதியாக உள்ள ஹரிகுமார், வரும் ஏப்ரல் 30ம் தேதியுடன் ஓய்வு பெற உள்ளார். இந்திய கடற்படையின் தற்போதைய தளபதி ஹரி குமாரை தொடர்ந்து,  வைஸ் அட்மிரல் தினேஷ் கே திரிபாதி அடுத்த தளபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.  ஏப்ரல் 30, 2024 அன்று தற்போதைய தலைமை அட்மிரல் ஹரி குமாரிடமிருந்து திரிபாதி பொறுப்பை ஏற்பார். இந்த ஆண்டின் தொடக்கத்தில், ஜனவரியில், கடற்படைத் துணைத் தளபதியாக வைஸ் அட்மிரல் திரிபாதி பொறுப்பேற்றார்.  மேலும் படிக்க..



  • மோடி மற்றும் ராகுல் காந்தி.. தமிழக வாக்காளர்களுக்கு வேண்டுகோள்..


இந்தியாவில் இருக்கும் வெறுப்புவாதத்தை வீழ்த்தி, ஜனநாயகத்தை நிலைநாட்ட ஒவ்வொரு குடிமக்களும் வாக்களிக்க வேண்டும் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இது தொடர்பான அவரது பதிவில், “ இன்று முதல் கட்ட வாக்குப்பதிவு! உங்கள் வாக்குகள் ஒவ்வொன்றும் இந்திய ஜனநாயகத்தின் எதிர்காலத்தையும், மேலும் படிக்க..



  • நீங்கள் எல்லாம் எதிர்பார்ப்பதுபோல் இந்தியா வெற்றிபெறும் - வாக்களித்தபின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி..!


தேனாம்பேட்டை எஸ்.ஐ.இ.டி கல்லூரியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அவரது மனைவி துர்கா ஸ்டாலினுடன் மக்களுடன் மக்களாக நின்று வாக்களித்தார். அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், “நான் என்னுடைய ஜனநாயக கடமையை ஆற்றிவிட்டேன். வாக்கு உள்ள அனைவரும் வாக்களிக்க வேண்டும். நீங்கள் எல்லாம் எதிர்பார்ப்பது மாதிரி இந்தியா வெற்றி பெறும்” என தெரிவித்தார். முன்னதாக, வாக்குரிமையை நிலைநாட்டுவோம்! ஜனநாயகத்துக்கான மகத்தான வெற்றியை ஈட்டுவோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதில், “விதைத்த உழைப்பெல்லாம் அறுவடையாகும் நாள் ஏப்ரல் 19! மேலும் படிக்க..