தேனாம்பேட்டை எஸ்.ஐ.இ.டி கல்லூரியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அவரது மனைவி துர்கா ஸ்டாலினுடன் மக்களுடன் மக்களாக நின்று வாக்களித்தார். அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், “நான் என்னுடைய ஜனநாயக கடமையை ஆற்றிவிட்டேன். வாக்கு உள்ள அனைவரும் வாக்களிக்க வேண்டும். நீங்கள் எல்லாம் எதிர்பார்ப்பது மாதிரி இந்தியா வெற்றி பெறும்” என தெரிவித்தார்.
வாக்களித்த பின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “நாடு காக்கும் ஜனநாயகக் கடமையை ஆற்றினேன்! அனைவரும் தவறாது வாக்களியுங்கள். குறிப்பாக, First time voters-ஆன இளைஞர்கள் ஆர்வத்தோடு வாக்களியுங்கள்! நம் இந்தியாவின் எதிர்காலம் உங்கள் கையில்...” என பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, வாக்குரிமையை நிலைநாட்டுவோம்! ஜனநாயகத்துக்கான மகத்தான வெற்றியை ஈட்டுவோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதில், “விதைத்த உழைப்பெல்லாம் அறுவடையாகும் நாள் ஏப்ரல் 19!
கழகச் சட்டத்துறை சார்பில் வழங்கப்பட்டுள்ள கையேட்டில் உள்ள நடைமுறைகளை மாவட்டக் கழகச் செயலாளர்கள் முதல் கிளைக்கழக நிர்வாகிகள் வரை கவனத்துடன் பின்பற்றுங்கள். வாக்குரிமையை நிலைநாட்டுவோம்! ஜனநாயகத்துக்கான மகத்தான வெற்றியை ஈட்டுவோம்!” என தெரிவித்தார்.