• Cauvery Water: தமிழ்நாட்டிற்கு தண்ணீர் கிடைக்குமா? கர்நாடகாவுக்கு எதிரான தமிழக அரசு மனு மீது இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை..


டெல்டா விவசாயிகளின் அடிப்படையாக உள்ள காவிரி நீர் தற்போது, கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டில் அரசியல் பிரச்னையாகவும் மாறியுள்ளது. ஏற்கனவே, உச்சநீதிமன்ற தீர்ப்பை பின்பற்றி தமிழ்நாட்டிற்கு உரிய நீரை வழங்க கர்நாடக அரசு மறுப்பு தெரிவித்து வருகிறது. இந்நிலையில் தான், தமிழகத்தில் காவிரி டெல்டா பாசனத்துக்கு கர்நாடக அணைகளில் இருந்து வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்துவிட காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது. அதன்படி, தண்ணீர் திறந்துவிடப்பட்டு வந்த நிலையில் அதனை கர்நாடக அரசு திடீரென நிறுத்தியது. மேலும் படிக்க 



  • Kashmir Issue: காஷ்மீர் விவகாரத்தை ஐ.நா. சபையில் எழுப்பிய துருக்கி அதிபர்..! பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசினாரா?


இந்தியா, பாகிஸ்தான் நாடுகள் சுதந்திரம் பெற்றதில் இருந்தே இரண்டு நாடுகளுக்கும் முக்கிய பிரச்னையாக இருந்து வருவது காஷ்மீர் விவகாரம். காஷ்மீர் தனக்குதான் சொந்தம் என பாகிஸ்தான் உரிமை கொண்டாடி வரும் நிலையில், இந்தியா அதை தொடர்ந்து கடுமையாக எதிர்த்து வருகிறது. குறிப்பாக, காஷ்மீர் விவகாரத்தை சர்வதேச அமைப்புகளில் பாகிஸ்தான் பல முறை எழுப்பியுள்ளது. ஆனால், இது உள்நாட்டு விவகாரம் என்றும் காஷ்மீரில் பயங்கரவாதத்தை பாகிஸ்தான் வளர்த்து வருவதாகவும் இந்தியா குற்றஞ்சாட்டி வருகிறது. மேலும் படிக்க 



  • Womens Reservation Bill: மகளிருக்கான 33 சதவீத இடஒதுக்கீடு மக்களவையில் நிறைவேற்றம்.. 454 பேர் ஆதரவு.. இத்தனை பேர் எதிர்ப்பா?


மக்களவையில் மகளிருக்கான 33 சதவீத இட ஒதுக்கீடுக்கான மசோதா  பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேறியுள்ளது. இதற்கு 454 உறுப்பினர்கள் ஆதரவாகவும், 2 உறுப்பினர்கள் எதிராகவும் வாக்களித்துள்ளனர். மகளிருக்கான 33 சதவீத இட ஒதுக்கீடு மசோதாவை நேற்று அதாவது செப்டம்பர் மாதம் 19ஆம் தேதி மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேஹ்வால் சமர்பித்தார். இன்று பெரும்பான்மையான வாக்குகளைப் பெற்று இந்த மசோதா நிறைவேறியுள்ளது. மேலும் படிக்க 



  • Amit Shah: மகளிர் இடஒதுக்கீடு மசோதா: "அரசியலாக்கும் சில கட்சிகள்”...மக்களவையில் அட்டாக் செய்த அமித் ஷா!


மகளிர் இடஒதுக்கீடு மசோதா தொடர்பாக பல ஆண்டுகளாக பல்வேறு விவாதங்கள் நடந்து வருகிறது. நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டப்பேரவைகளில் 33 சதவிகிதம் இடங்களை பெண்களுக்கு ஒதுக்கும் வகையிலான இந்த மசோதா, கடந்த 1996ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் முதல்முறையாக தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், அப்போது மசோதா நிறைவேற்ற படவில்லை. இதைதொடர்ந்து, முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அவரது ஆட்சி காலத்தில் இந்த மசோதாவை நிறைவேற்ற பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டார்.  ஆனால், போதிய ஆதரவு இல்லாமல் போனதால் அவரது கனவு நனவாகாமலே போனது. மேலும் படிக்க 



  • India-Canada: ”கனடாவில் உள்ள இந்தியர்கள் எச்சரிக்கையாக இருங்கள்" - வெளியுறவுத்துறை அறிவுறுத்தல்!


இந்தியாவுக்கும் கனடா நாட்டிற்கும் இடையே நல்லுறவே நீண்ட காலமாக இருந்தது. இரு நாடுகளும் தடையற்ற வர்த்தக உறவில் ஈடுபடுவது குறித்து தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. இந்த நிலையில் தான் இரு நாடுகளுக்கு இடையேயான உறவில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.அதாவது, கடந்த ஜூன் மாதம் கனடா நாட்டைச் சேர்ந்த காலிஸ்தான்  ஆதரவாளர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் என்பவர் அடையாளம் தெரியாத இரண்டு நபர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.  இந்த சம்பவம் தான் இப்போது  விஸ்வரூபம் எடுத்துள்ளது. மேலும் படிக்க