• ஆசிய விளையாட்டு போட்டியில் 100 பதக்கங்கள்.. பிரதமர் மோடி வாழ்த்து..


ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்தியா 100 பதக்கங்களை வென்றதை ஒட்டி பிரதமர் மோடி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இது தொடர்பான அவரது எக்ஸ் பதிவில், “ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்கு மிகப்பெரிய சாதனை! 100 பதக்கங்கள் என்ற குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியதில் இந்திய மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்” என குறிப்பிட்டுள்ளார். மேலும் படிக்க..



  • பதவி பிரமாணம் எடுத்ததை மறந்துவிட்டீற்களா? போஸ்டர் யுத்தத்தில் பாஜகவை வெளுத்து வாங்கிய பிரியங்கா காந்தி..


இன்னும் 30 நாள்களில் ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தல் நடத்தப்பட உள்ளது. அதற்கான அறிவிப்பு இன்னும் 2, 3 நாள்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதை தொடர்ந்து, அடுத்தாண்டு ஏப்ரல், மே மாதங்களில் மக்களவை தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக, அரசியல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. பிரதமர் மோடி தொடங்கி பாஜக தலைவர்கள் வரை, காங்கிரஸ் கட்சியை கடுமையாக சாடி வருகின்றன. மேலும் படிக்க..



  • இன்னும் 2 ஆண்டுகள்தான்; இடதுசாரி பயங்கரவாதத்திற்கு தேதி குறித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா..


இடதுசாரி தீவிரவாதம் நாட்டுக்கு பெரும் சவால் விடுத்து வருவதாக மத்திய அரசு கூறி வருகிறது. குறிப்பாக, நக்சல் தீவிரவாதத்தால் வளர்ச்சி பணிகள் தடைப்படுவதாக மத்திய அரசு கூறி வருகிறது. சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், ஜார்க்கண்ட், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்கள் நக்சல் தீவிரவாதத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களாக உள்ளன. மேலும் படிக்க..



  • இதை ஏன் வெளியிட்டீங்க? அதிகாரம் இருக்கிறதா? – பீகார் அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்..


பிகார் மாநிலத்தில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த நிதிஷ் குமார் தலைமையிலான அரசு முடிவெடுத்து, இரண்டு கட்டங்களாக அதற்கான பணிகளை மேற்கொண்டது. ஆனால், சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த மாநில அரசுக்கு அதிகாரமில்லை என கூறி, பாட்னா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மேலும் படிக்க..



  • வெள்ளத்தால் சிக்கித் தவிக்கும் சிக்கிம: 100 பேர் மாயம்.. நாளுக்கு நாள் அதிகரிக்கும் உயிரிழந்தோரின் எண்ணிக்கை..


அசாம் மாநிலத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக நாளுக்கு நாள் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருப்பது பெரும்  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிக்கிம் மாநிலத்தில் திடீர் மேகவெடிப்பு காரணமாக தொடர்ந்து மூன்று நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால், மாநிலத்தில் பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதோடு, அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால், அணைகளில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இதனை அடுத்து, லாச்சென் பள்ளத்தாக்கில் உள்ள டீஸ்டா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து அந்த பள்ளாத்தாக்குப் பகுதியில் இருந்த ராணுவ வாகனங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன. மேலும் படிக்க..



  • முதல்வர் ஸ்டாலின் ஃபார்முலாவை கையில் எடுத்த கேசிஆர்.. தெலங்கானாவில் எதிரொலிக்கும் தமிழ்நாடு மாடல்..


கடந்த 2021ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் வெற்றிபெற்று திமுக ஆட்சி அமைத்ததில் இருந்து பல்வேறு மக்கள் நல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இல்லம் தேடி கல்வி, மக்களை தேடி மருத்துவம், புதுமை பெண் திட்டம், மகளிர் உரிமை தொகை, மகளிருக்கு விலையில்லா பேருந்து பயணம் என இந்த பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. மேலும் படிக்க..



  • வங்கியில் கடன் வாங்கியவர்களா? உங்களுக்கான நற்செய்தி.. ரெப்போ வட்டி விகிதம் மாறவில்லை.. ஆர்பிஐ..


நிதி பற்றாக்குறை ஏற்படும் போது, மத்திய வங்கியான ரிசர்வ் வங்கி பிற வங்கிகளுக்கு குறிப்பிட்ட வட்டி வகிதத்தில் கடன் அளிக்கும். அதன் பெயர்தான் ரெப்போ வட்டி ஆகும். பணவீக்கத்தின்போது, கடன் வாங்குவதை தவிர்க்கும் வகையில் ரெப்போ வட்டியை மத்திய வங்கி உயர்த்தும். இதன் மூலம், பொருளாதாரத்தில் பண புழக்கம் ஒழுங்குபடுத்தப்பட்டு, பண வீக்கம் குறைக்கப்படும். மேலும் படிக்க..