தாம்பரத்தில் தொடர் போக்குவரத்து நெரிசல்..


நேற்று மாலை முதலே மீண்டும் சென்னையை நோக்கி சொந்த ஊருக்கு திரும்பினர். இதனை முன்னிட்டு பல சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. சென்னையை நோக்கி பொதுமக்கள் படையெடுத்த துவங்கியதால் பல இடங்களில் கடமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. செங்கல்பட்டு அருகே சிங்கப்பெருமாள் கோவிலில் ஏற்பட்ட கடும் போக்குவரத்து நெரிசல் காரணமாக வாகனங்கள் ஊர்ந்து செல்லக்கூடிய சூழல் ஏற்பட்டது. சென்னை புறநகர் பகுதியாக உள்ள தாம்பரம், பெருங்களத்தூர் ,கூடுவாஞ்சேரி, உள்ளிட்ட பகுதிகள் கடும் போக்குவரத்து நெரிசலில் நேற்று மாலை முதல் விடியற்காலை வரை சிக்கி தவித்து வந்தது.மேலும் வாசிக்க..


மஹாராஷ்டிரா மருத்துவமனையில் 24 பேர் மரணம்


நாட்டின் மிகப்பெரிய மாநிலமாக திகழ்வது மகாராஷ்ட்ரா ஆகும். இந்த மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அந்த மாநிலத்தில் உள்ள மருத்துவமனைகளில் மட்டும் புதியதாக பிறந்த 12 குழந்தைகள் உள்பட 24 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மருத்துவமனைகளில் ஏற்பட்ட மருந்துகள் பற்றாக்குறை காரணமாக இந்த உயிரிழப்பு ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.மேலும் வாசிக்க..


தொடர் கனமழை- பள்ளிகளுக்கு விடுமுறை


கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர் கனமழை காரணமாக 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை விடுமுறை என கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் வாசிக்க..


100 டால்ஃபின்கள் உயிரிழப்பு


பிரேசில் நாட்டில் உள்ள அமேசான் காடுகளில் உள்ள டெஃபி (Tefe) ஏரி பகுதியில் 100-க்கும் மேற்பட்ட டால்பின்கள் இறந்து கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வாரத்தில் மட்டும்  டெஃபி ஏரிப் பகுதியில் சுமார் 100 டால்பின்கள் உயிரிழந்ததற்கு காரணம் அதிக வெப்பநிலையாக இருக்கலாம் The Mamirauá Institute என்ற ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. சமீப காலமாக டால்பின்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும் இது தொடர்பாக கவனம் செலுத்த வேண்டிய அவசியத்தையும் குறிப்பிட்டுள்ளது. மேலும் வாசிக்க..


ஜெய்ஸ்வால் சதம்


ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா மற்றும் நேபாளம் இடையே கால் இறுதி ஆட்டம் நடைபெற உள்ளது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது. இவ்விரு அணிகளுக்கிடையிலான இந்தப் போட்டி ஹாங்சோவில் உள்ள பிங்ஃபெங் கேம்பஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியில் முதன்முறையாக இந்திய அணிக்கு ருதுராஜ் கெய்க்வாட் கேப்டனாக உள்ளார். அதேசமயம், நேபாள அணிக்கு ரோகித் பவுடல் தலைமை தாங்குகிறார். மேலும் வாசிக்க..


ரூ.2 ஆயிரம் நோட்டு எக்ஸ்சேஞ் - தமிழ்நாடு


நாடு முழுவதும் கிளைகளை கொண்டுள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் கடந்த மே மாதம் ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கான அறிவிப்பு வெளியான நாளில் இருந்து செப்டம்பர் இறுதி வரை கிட்டதட்ட ரூ.4 ஆயிரம் கோடிக்கு பண மாற்றமானது நடைபெற்றுள்ளது. இதில் தமிழ்நாடு, புதுச்சேரியில் மட்டும் ரூ.1,260 கோடிக்கு பண பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் வாசிக்க..