ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா மற்றும் நேபாளம் இடையே கால் இறுதி ஆட்டம் நடைபெற உள்ளது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது. இவ்விரு அணிகளுக்கிடையிலான இந்தப் போட்டி ஹாங்சோவில் உள்ள பிங்ஃபெங் கேம்பஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியில் முதன்முறையாக இந்திய அணிக்கு ருதுராஜ் கெய்க்வாட் கேப்டனாக உள்ளார். அதேசமயம், நேபாள அணிக்கு ரோகித் பவுடல் தலைமை தாங்குகிறார்.
இந்திய அணி நேரடியாக காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. அதேசமயம் நேபாளம் கால் இறுதிக்கு முன் இரண்டு போட்டிகளில் விளையாடி காலிறுதி போட்டிக்கு வந்தது. நேபாளம் தனது முதல் போட்டியில் மங்கோலியாவுக்கு எதிராக விளையாடியது, அதில் அணி பல உலக சாதனைகளை படைத்தது. இந்தப் போட்டியைப் பற்றி பேசுகையில், விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஜிதேஷ் சர்மா மற்றும் பந்து வீச்சாளர் சாய் கிஷோர் ஆகியோர் இந்தியாவுக்காக சர்வதேச அளவில் அறிமுகமாகிறார்கள். கடந்த ஐபிஎல் தொடரில் ஜிதேஷ் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காகவும், சாய் கிஷோர் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காகவும் விளையாடினர்.
இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ஜெய்ஸ்வால் மற்றும் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் களமிறங்கினர். ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடி ஜெய்ஸ்வால் 31 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார். தொடர்ந்து, 23 பந்துகளில் 25 ரன்கள் எடுத்து ருதுராஜ் அவுட்டாக, பின்னால் வந்த திலக் வர்மா 2 ரன்களிலும், ஜிதேஷ் சர்மா 5 ரன்களில் ஆட்டமிழந்தனர்.
தொடர்ந்து சிறப்பாக விளையாடிய ஜெய்ஸ்வால் 48 பந்துகளில் 8 பவுண்டரிகள், 7 சிக்ஸர்கள் உதவியுடன் சதத்தை பூர்த்தி செய்தார். அடுத்த 2 பந்துகளிலேயே அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார் ஜெய்ஸ்வால். தற்போது இந்திய அணி நேபாள அணிக்கு எதிராக 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 202 ரன்கள் குவித்துள்ளது. இதையடுத்து நேபாள அணி அடுத்ததாக 203 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கும்.
இன்றைய ஆட்டத்தில் இந்தியா விளையாடும் லெவன்
ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், திலக் வர்மா, ஷிவம் துபே, ரிங்கு சிங், ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், ஆர் சாய் கிஷோர், ரவி பிஷ்னோய், அவேஷ் கான், அர்ஷ்தீப் சிங்.
இன்றைய ஆட்டத்தில் நேபாளம் விளையாடும் லெவன்
ரோஹித் பவுடல் (கேப்டன்), குஷால் புர்டெல், ஆசிப் ஷேக் (விக்கெட் கீப்பர்), சந்தீப் ஜோரா, குல்சன் ஜா, குஷால் மல்லா, தீபேந்திர சிங் ஐரே, சோம்பால் கமி, கரண் கேசி, அவினாஷ் போஹாரா, சந்தீப் லாமிச்சானே.