• தெலங்கானா, தமிழ்நாட்டை தொடர்ந்து கேரள அரசு அதிரடி - ஆளுநருக்கு எதிராக சட்ட போராட்டம்




எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநருக்கும் மாநில அரசுக்கும் இடையே தொடர்ந்து அதிகார போட்டி நிலவி வருகிறது. கேரளா, தமிழ்நாடு, டெல்லி, தெலங்கானா, பஞ்சாப், மேற்குவங்கம் என இந்த பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. மாநில சட்டப்பேரவைகளில் நிறைவேற்றும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர்கள் காலதாமதம் செய்வதாக தொடர் குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தாமதிப்பதாக கூறி, கே. சந்திரசேகர் ராவ் தலைமையிலான அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. மேலும் படிக்க..



  • "இன்னும் எந்தளவுக்கு கீழ்த்தரமா இறங்குவாங்களோ" பெண்கள் குறித்து சர்ச்சை கருத்து - வெளுத்து வாங்கிய பிரதமர்


பிகார் சட்டப்பேரவையில் நேற்று பேசிய அம்மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார், “பிகாரில் பெண் கல்வி உயர்ந்துள்ளது. இது மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்துவதிலும் உதவிகரமாக உள்ளது. ஒரு படித்த பெண் திருமணம் செய்துகொள்ளும்போது, கருவுறுதலை தடுப்பதற்கான வழிமுறகளை கணவருக்கு கற்று கொடுக்க முடியும். இது மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்த உதவுகிறது” என கூறினார்.  மேலும் படிக்க..



  • "நாங்க உங்கள கட்டிப்பிடிக்கிறோம்.. ஆனா, பாஜகவினர் உங்க மேல சிறுநீர் கழிக்கிறாங்க" - ராகுல் காந்தி 


அடுத்தாண்டு ஏப்ரல், மே மாதங்களில் மக்களவை தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கு முன்பாக, ஐந்து மாநில தேர்தல் நேற்றுடன் (நவம்பர் 7ஆம் தேதி) தொடங்கியது. மிசோரத்தில் மொத்தமாக உள்ள 40 தொகுதிகளுக்கும் சத்தீஸ்கரில் முதற்கட்டமாக 20 தொகுதிகளுக்கும் நேற்று தேர்தல் நடத்தப்பட்டது. சத்தீஸ்கரை பொறுத்தவரையில், பாஜக செல்வாக்கு செலுத்தும் மாநிலங்களில் ஒன்றாக உள்ளது. மேலும் படிக்க..



  • சுவாசிக்க முடியாமல் திணறும் கிரிக்கெட் வீரர்கள்.. உலகக்கோப்பையை உலுக்கி எடுக்கும் காற்று மாசு


இந்தியாவின் முக்கிய நகரங்கள், காற்று மாசுபாட்டால் பாதிக்கப்பட்டு வாழ்வதற்கு தகுதியற்றவையாக மாறி வருகின்றன. உலகளவில் காற்று மாசுபாட்டால் பாதிக்கப்பட்ட முதல் 10 நகரங்களின் பட்டியலில் டெல்லி, மும்பை, கொல்கத்தா ஆகியவை இடம்பெற்றுள்ளது. உலக கோப்பை போட்டிகள் நடந்து வரும் நகரங்களில் கடந்த சில வாரங்களாகவே காற்றின் தரம் மோசமான நிலையில் உள்ளதாக IQAir தகவல் வெளியிட்டுள்ளது. இந்திய நகரங்களில் நிலவி வரும் மோசமான புகை மூட்டம் குறித்து உலக கிரிக்கெட் வீரர்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். மேலும் படிக்க..



  • "3வது பதவிக்காலத்தில் உலகின் முதல் 3 பொருளாதாரங்களில் ஒன்றாக இந்தியாவை உயர்த்துவேன்" - பிரதமர் மோடி


பாஜகவின் கோட்டைகளில் ஒன்றாக மத்தியப் பிரதேசம் கருதப்படுகிறது. கடந்த 20 ஆண்டுகளில் 19 ஆண்டுகளாக, அங்கு பாஜக ஆட்சி செய்து வருகிறது. கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றாலும், 15 மாதங்களிலேயே கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்து, பாஜக ஆட்சி அமைத்தது. மேலும் படிக்க..



  • கேரளாவை துரத்தும் வைரஸ்.. 8 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு.. மக்கள் கவனத்துடன் இருக்க அறிவுறுத்தல்..


கேரளா மாநிலத்தில் 8 பேருக்கு ஜிகா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பொது மக்கள் மிகுந்த கவனத்துடன் இருக்கும்படி அம்மாநில சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. கேரளா மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில், கடந்த 30 ஆம் தேதி ஒருவருக்கு ஜிகா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து நவம்பர் 1 ஆம் தேதி நீதிமன்ற வளாகத்தில் மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. அப்போது 55 பேரில் 24 பேரின் ரத்த மாதிரிக்கள் சோதனைக்கு அனுப்பப்பட்டது. இவற்றி 8 பேருக்கு ஜிகா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டது. மேலும் படிக்க..