தமிழ்நாடு:
- தீபாவளியை கொண்டாட சொந்த ஊர் செல்ல சிறப்பு பேருந்துகள் இன்று முதல் இயக்கம்; சுமார் 1.20 லட்சம் பேர் முன்பதிவு
- கோயம்புத்தூர் மாவட்டத்தில் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை - கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவிப்பு
- தீபாவளி பண்டியகையை முன்னிட்டு தமிழ்நாடு நுகர்வோர் வாணிப கழக பணியாளர்களுக்கு 20% போனஸ் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
- கோயில் அர்ச்சகர்கள் நியமன விவகாரத்தில் தமிழ்நாடு அரசாணைக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு - ஜனவரி 25ம் தேதி வழக்கு ஒத்திவைப்பு
- தமிழ்நாட்டின் பல இடங்களில் கனமழை பெய்யும் - வானிலை மையம் தகவல்
- அதிமுக பெயர், கொடி, சின்னத்தை பயன்படுத்த ஓபிஎஸ் அணிக்கு தனி நீதிபதி விதித்த தடையை எதிர்த்து மேல்முறையீடு - நாளை விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி
- எத்தனை குட்டிக்கரணம் அடித்தாலும் பாஜக காலூன்ற முடியாது ; தமிழகத்தில் எப்போதும் திமுக ஆட்சிதான் - அமைச்சர் சேகர்பாபு
- தீபாவளி நாளில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி பட்டாசு வெடித்தால் வழக்குப்பதிவு
- தீபாவளியின்போது வெடித்த பட்டாசு கழிவுகளை பொதுமக்கள் பாதுகாப்பாக கையாள வேண்டும் - மேயர் பிரியா வலியுறுத்தல்
- தீபாவளியையொட்டி முன்பதிவு இல்லாத சிறப்பு ரெயில்கள் இயக்க வேண்டும்: தென்னக ரெயில்வே நிர்வாகத்திடம் வலியுறுத்தல்
- தமிழ்நாட்டில் 300-க்கும் மேற்பட்ட புலிகள் உள்ளதாகவும் புலிகளின் இறப்பை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்தார்.
- பால் உற்பத்தியை அதிகரிக்க விவசாயிகளுக்கு கடன் வழங்கி பால் பண்ணை தொடங்க கூறி வருகிறோம் என அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.
- ஒரு வாரத்திற்குள் பட்டா மாறுதல் செய்யும் வசதி - தமிழக அரசு தகவல்
இந்தியா:
- வயநாட்டின் பதுங்கியிருந்த மாவோயிஸ்ட்கள் போலீஸ் இடையே துப்பாக்கி சண்டை - பெண் உட்பட 2 பேர் கைது, 2 பேர் தப்பியோட்டம்
- வடமாநில கூலி தொழிலாளர்கள் போல் சென்னையில் ஊடுருவிய வங்கதேச வாலிபர்கள் உள்பட 4 பேர் அதிரடி கைது - நாடு முழுவதும் என்.ஐ.ஏ அதிகாரிகள் தீவிர சோதனை
- மகாராஷ்டிரா: மதிய உணவு திட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கு முட்டையுடன் கூடிய பிரியாணி கொண்டுவர திட்டம்
- வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு 2.25 லட்சம் சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் - திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு
- பள்ளி பாடத்தில் தர்மம், மதத்தை சேர்க்கக் கோரி மனு - மத்திய அரசு பதிலளிக்க டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு
- காற்று மாசு எதிரொலி: டெல்லியில் 18ம்தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
உலகம்:
- இஸ்ரேல் ராணுவம் காசா நகரின் மையப்பகுதியில் உள்ளது - பாதுகாப்புத்துறை அமைச்சர் தகவல், ஆனால் இதற்கு ஹமாஸ் அமைப்பு மறுப்பு தெரிவித்துள்ளது.
- கென்யா, சோமாலியாவில் கனமழை - வெள்ளப்பெருக்கில் சிக்கி 40 உயிரிழந்ததாக தகவல்.
- சிலி நாட்டில் சட்டவிரோத குடியேற்ற பகுதியில் தீ விபத்து: 8 சிறார்கள் உட்பட 14 பேர் உயிரிழப்பு
- காசாவில் இதுவரை 130 சுரங்கங்கள் அழிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விளையாட்டு:
- உலகக் கோப்பை 2023: நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் 160 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது இங்கிலாந்து அணி
- ஐசிசி ஒருநாள் தரவரிசை: சுப்மன் கில் மற்றும் முகமது சிராஜ் தரவரிசை பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேற்றம்
- உலகக் கோப்பை 2023: நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று பெங்களூருவில் சின்னசாமி ஸ்டேடியத்தில் மதியம் 2 மணிக்கு தொடங்குகிறது.