• மாநிலங்களை ஒழித்துக்கட்ட நினைக்கிறது பாஜக - முதல்வர் மு.க.ஸ்டாலின் பகிரங்க குற்றச்சாட்டு


அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள சூழலில், மத்தியில் ஆளும் பாஜக பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதில் தற்போது பெரும் பேசுபொருளாக மாறியிருப்பது ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம்தான். இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இந்தியாவிற்காக பேச பாட்காஸ்ட் தொடங்கப்படும் என அறிவித்திருந்தார். அதன்படி இன்று காலை தனது மூன்றாவது பாட்காஸ்ட் சிரீஸ் வெளியிட்டுள்ளார். மேலும் படிக்க..



  • 'நான் வாக்குறுதி வழங்கினால் அதை நிறைவேற்றுவேன்..' மக்கள் முன்பு பிரதமர் மோடி பேச்சு


கடந்த இரண்டு மக்களவை தேர்தலில் தொடர்ந்து வெற்றி பெற்ற பாஜக, ஒன்பதரை ஆண்டுகளாக மத்தியில் ஆட்சி செய்து வருகிறது. வரவிருக்கும் தேர்தலிலும் வெற்றிபெற்று தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க பா.ஜ.க. முனைப்பு காட்டி வருகிறது. கடந்த இரண்டு தேர்தலிலும் பாஜக ஆட்சி அமைப்பதற்கு வட மாநிலங்கள் முக்கிய பங்காற்றின. மேலும் படிக்க..



  • தீக்கிரையாகும் மகாராஷ்டிரா.. கொளுத்தப்பட்ட எம்.எல்.ஏ. வீடு! விஸ்வரூபம் எடுத்த இடஒதுக்கீடு விவகாரம்!


மராத்தா சமூகத்தவருக்கு இடஒதுக்கீடு கோரி நடத்தப்பட்டு வரும் போராட்டம் மகாராஷ்டிராவை பதற்றத்தில் ஆழ்த்தி வருகிறது. மகாராஷ்டிர அரசியலில் ஆதிக்கம் செலுத்தி வரும் அவர்கள், அம்மாநில மக்கள் தொகையில் மூன்றில் ஒரு சதவிகிதமாக உள்ளனர். அரசியலில் ஆதிக்கம் செலுத்தினாலும் பெரும்பாலும் விவசாய தொழிலில் ஈடுபட்டு வந்தார்கள். ஆனால், காலப்போக்கில், பொருளாதார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் பெரும் சவால்களை சந்தித்து வருகின்றனர். இதன் காரணமாக, தங்களுக்கு இடஒதுக்கீடு கோரி போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் படிக்க..



  • தேவரின் பணிகள் தேசத்தின் வளர்ச்சிக்கு ஒளியேற்றுகிறது: பிரதமர் மோடி புகழஞ்சலி


முத்துராமலிங்க தேவரின் 116 வது ஜெயந்தி விழா மற்றும் 61வது குருபூஜை இன்று ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பசும்பொன்னில் நடைபெறுகிறது. கடந்த இரு தினங்கள் முன்னதாகவே இந்த விழாவுக்கான ஏற்பாடுகள் தொடங்கி விட்டது. முக்குலத்தோர் சமூகத்தை சேர்ந்த மக்கள், காப்பு அணிந்து, விரதம் இருந்து பசும்பொன்னில் உள்ள அவரது நினைவிடத்தில் நேர்த்தி கடன் செலுத்தி வழிபாடு நடத்தி வருகின்றனர்.  மேலும் படிக்க..



  • உலகப்புகழ் பெற்ற சபரிமலை கோயில்.. முக்கிய விஷேசங்கள் எப்போது? பிரத்யேக தகவல் உங்களுக்காக!


கேரள மாநிலம் பத்தினம்திட்டாவில் அமைந்துள்ளது சபரிமலை. உலகப்புகழ்பெற்ற சபரிமலை கோயிலில் ஐயப்பனை தரிசனம் செய்ய ஆண்டுதோறும் கோடிக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம். கார்த்திகை மாதத்தில் மட்டும முதல் நாள் தொடங்கி மண்டல பூஜை காலம் வரை 41 நாட்கள் ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டிருக்கும்.  மார்கழி மாதத்திலும் தை மாதத்திலும் மகர விளக்கு பூஜைக்காக கோயில் நடை திறக்கப்பட்டிருக்கும். பங்குனி மாத ஆராட்டு விழாவும், சித்திரை மாத விஷூகனி காணும் விழாவும் கோயிலில் சிறப்பாக நடைபெறும். மேலும் படிக்க..



  • மணீஷ் சிசோடியாவுக்கு பிணை மறுப்பு.. உச்ச நீதிமன்றம் எடுத்த அதிரடி முடிவு


ஆம் ஆத்மி கட்சியில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் உள்ள மணீஷ் சிசோடியாவை சிபிஐ அதிகாரிகள் பிப்ரவரி 26ஆம் தேதி கைது செய்தனர். டெல்லி மதுபான கொள்கையில் முறைகேடு நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், சிபிஐ இந்த நடவடிக்கையை எடுத்திருந்தது. மேலும் படிக்க..