தமிழ்நாடு:



  • தமிழ்நாட்டில் இன்று 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்

  • இன்னாருக்கு இது ஆரியம்; எல்லாருக்கும் எல்லாம் இது திராவிடம்; ஆளுநர் மாளிகை பாஜக அலுவலகமாக மாறியிருப்பது வெட்கக்கேடு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி 

  • அதிமுக ஆட்சியில் அண்ணா பல்கலைக்கழக முறைகேடு வழக்கில் முன்னாள் துணைவேந்தர் சூரப்பாவுக்கு சம்மன்; நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவு

  • மனைவிக்கு சிகிச்சையளிக்க ஏற்பாடு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி - இயக்குநர் விக்ரமன் உருக்கம்

  • போராட்டம் அறிவித்த ஆசிரியர் அமைப்புகளுடன், புதன்கிழமை ( நாளை) அன்று பேச்சுவார்த்தை நடத்த பள்ளிக்கல்வித்துறை அழைப்பு விடுத்துள்ளது.

  • சேலத்தில் இருந்து சென்னை, பெங்களூரு, ஹைதராபாத் வழியாக சிங்கப்பூர், கொழும்பு, கோலாலம்பூர், அபுதாபி, தோஹா, ஷார்ஜா, குவைத் உள்ளிட்ட 11 நாடுகளுக்கு விமான சேவை முழுவதுமாக தொடங்கியது. 

  • விபத்து ஏற்படுத்திய வழக்கில் யூட்யூபர் டிடிஎஃப் வாசனுக்கு 4வது முறையாக வருகின்ற நவம்பர் 9ம் தேதி வரை நீதிமன்ற காவலை நீட்டித்து நீதிபதி இனிய கருணாகரன் உத்தரவு பிறப்பித்தார்.

  • பிரபல ரவுடி கருக்கா வினோத்தை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.


இந்தியா: 



  • தேசிய ஒருமைப்பாட்டு நாள் என்பது இந்தியாவில் அக்டோபர் 31 அன்று கொண்டாடப்படுகிறது. இது 2014-ல் இந்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டு நாடுமுழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்தியாவின் அரசியல் ஒருங்கிணைப்பில் முக்கிய பங்காற்றிய சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாளைக் குறிக்கும் வகையில் இந்த நாள் கொண்டாடப்படுகிறது.

  • ஆந்திர ரயில் விபத்துக்கு மனித தவறே காரணம் என ரயில்வே அறிவிப்பு; சிக்னலை கவனிக்காமல் ரயிலை ஓட்டியது ஏன் எனவும் தீவிர விசாரணை

  • வினாடிக்கு 2600 கன அடி வீதம் தமிழ்நாட்டுக்கு மேலும் 23 நாட்களுக்கு காவிரியில் தண்ணீர் திறக்க வேண்டும் - ஒழுங்காற்று குழு பரிந்துரை

  • கேரளாவில் ஜெபக் கூட்டத்தில் குண்டு வெடிப்பு உயிரிழப்பு எண்ணிக்கை 3 ஆக உயர்வு - சரணடைந்த டொமினிக் மார்ட்டின் சிறையில் அடைப்பு

  • 5 மாநில சட்டமன்ற தேர்தலிலும் பாஜக தோற்கும் - காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே 

  • டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை சம்மன்


உலகம்: 



  • இஸ்ரேல் தாக்குதலால் இடிபாடுகளில் சிக்கிய குழந்தை; காப்பாற்றி விட்டு கதறி அழுத மீட்பு படை வீரர்

  • பொதுமக்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குக: இஸ்ரேலை வலியுறுத்தும் அமெரிக்கா!

  • ஹமாசின் ராணுவத் திறன்களை அழிப்பதில் தெளிவான இலக்கை நிர்ணயித்துள்ளோம் - இஸ்ரேல் பிரதமர் 25வது நாளாக தொடரும் இஸ்ரேல் - ஹமாஸ் போர் - உயிரிழந்தோர் எண்ணிக்கை 10,000 ஐ நெருங்குகிறது. 


விளையாட்டு: 



  • உலகக் கோப்பை 2023: வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் இன்று களமிறங்கிறது பாகிஸ்தான் அணி

  • உலகக் கோப்பை தொடர் தோல்வி எதிரொலி: பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவர் இன்சமாம் உல் ஹக் ராஜினாமா.

  • உலகக் கோப்பை 2023: இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது ஆப்கானிஸ்தான் அணி.

  • பெண்களுக்கான ஆசிய சாம்பியன்ஸ் ஆக்கி போட்டியில் சீனாவை 2-1 என்ற கோல் கணக்கில் இந்திய அணி வென்றது.

  • 2023 ஆம் ஆண்டுக்கான ஆண்கள் பலோன் டி'ஓர் விருதை லியோனல் மெஸ்ஸி எட்டாவது முறையாக வென்று சாதனை படைத்துள்ளார்.