• Wrestlers protest: நாட்டை நேசிப்பவர்கள் மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டத்தில் பங்கேற்க வேண்டும் - அரவிந்த் கெஜ்ரிவால்


டெல்லி ஜன்தர் மந்தரில் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் நடத்தி வரும் போராட்டத்தில் இன்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பங்கேற்று ஆதரவு தெரிவித்தனர்.  மேலும் படிக்க https://tamil.abplive.com/news/india/delhi-protest-arvind-kejriwal-priyanka-participate-wrestler-harrasment-114477/amp



  • Priyanka Gandhi : தற்கொலை ஒன்னும் ஜோக் இல்ல.. பிரதமரைச் சாடிய பிரியங்கா காந்தி.. அப்படி என்னதான் சொன்னார்?


தற்கொலை குறித்து பிரதமர் மோடி ஜோக் அடித்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலை குறித்தும் மன நல பிரச்னை குறித்தும் பிரதமர் மோடி கேலி செய்ததற்கு எதிர்க்கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அதற்கு காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கடுமையாக எதிர்வினை ஆற்றியுள்ளார். "இளைஞர்கள் தற்கொலை செய்து கொள்ளும் விவகாரம் துயரமான விஷயம். கேலி செய்வதற்கான விஷயம் அல்ல" என பிரியங்கா காந்தி விமர்சித்துள்ளார்.  மேலும் படிக்க https://tamil.abplive.com/news/india/opposition-leaders-slam-prime-minister-modi-joke-on-suicide-know-more-details-114459/amp



  • 2-வது திருமணம் செய்து கொள்வதாக கூறி பெண்ணுடன் பாலியல் உறவு கொள்வது சரியா? தவறா? - உயர் நீதிமன்றத்தின் கருத்து என்ன?


முதல் திருமண விவாகரத்திற்கு பிறகு, இரண்டாவது திருமணம் செய்து கொள்வதாகக் கூறி பெண்ணுடன் பாலியல் உறவு கொண்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நபரை குற்றவாளி என கீழமை நீதிமன்றம் அறிவித்திருந்தது. பாதிக்கப்பட்ட பெண், ஏமாற்றப்பட்டுள்ளதாக கூறி, இந்திய தண்டனைச் சட்டம், பிரிவு 417இன் கீழ் குற்றம்சாட்டப்பட்ட நபருக்கு தண்டனை வழங்கப்பட்டது. மேலும் படிக்க https://tamil.abplive.com/news/india/calcutta-high-court-says-promise-of-marriage-after-divorce-by-itself-does-not-amount-to-cheating-114444/amp



  • ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்தின் கணக்கை முடக்கிய ட்விட்டர் நிறுவனம்..! - காரணம் இதுதான்...!












ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்தின் ட்விட்டர் பக்கத்தை ட்விட்டர் நிர்வாகம் முடக்கியுள்ளது. ஏ.என்.ஐ  ட்விட்டர் கணக்கு விதிமுறைகளுக்கு உட்பட்டு இல்லாததால் முடக்கியதாக ட்விட்டர் நிர்வாகம் விளக்கம் அளித்தது.“ ட்விட்டர் கணக்கை உருவாக்க, உங்களுக்கு குறைந்தபட்சம் 13 வயது இருக்க வேண்டும். இந்த வயது கணக்கை நீங்கள் பூர்த்தி செய்யவில்லை.  எனவே உங்கள் கணக்கு முடக்கப்பட்டது. மேலும், ட்விட்டரில் இருந்து விரைவில் அகற்றப்படும் என தெரிவித்தது.  மேலும் படிக்க https://tamil.abplive.com/news/india/ani-news-agency-s-twitter-page-has-been-blocked-by-twitter-management-114448/amp














 


  • Maan Ki Baat: 100வது மன் கி பாத்; ஐ.நா. சபையில் நேரடி ஒலிபரப்பாகும் பிரதமர் மோடியின் நிகழ்ச்சி - மிகுந்த எதிர்பார்ப்பு


பிரதமர் மோடியின் 100-வது மன் கி பாத் நிகழ்ச்சியை அமெரிக்காவில் உள்ள ஐ.நா. தலைமையகத்தில் நேரடி ஒலிபரப்பு செய்யப்பட உள்ளது. பிரதமர் மோடியின் மன் கி பாத் நிகழ்ச்சி  இந்திய நேரப்படி இன்று காலை 11 மணிக்கு ஒலிப்பரப்பாகும். மேலும், அமெரிக்காவின் நேரப்படி ஞாயிற்றுக் கிழமை அதிகாலை 2 மணிக்கு இந்த உரை ஒலிபரப்பாகும்.  மேலும் படிக்க https://tamil.abplive.com/news/india/maan-ki-baat-100th-episode-telcase-today-india-and-america-un-council-telecast-114523/amp