ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்தின் ட்விட்டர் பக்கத்தை ட்விட்டர் நிர்வாகம் முடக்கியுள்ளது. ஏ.என்.ஐ  ட்விட்டர் கணக்கு விதிமுறைகளுக்கு உட்பட்டு இல்லாததால் முடக்கியதாக ட்விட்டர் நிர்வாகம் விளக்கம் அளித்தது.“ ட்விட்டர் கணக்கை உருவாக்க, உங்களுக்கு குறைந்தபட்சம் 13 வயது இருக்க வேண்டும். இந்த வயது கணக்கை நீங்கள் பூர்த்தி செய்யவில்லை.  எனவே உங்கள் கணக்கு முடக்கப்பட்டது. மேலும், ட்விட்டரில் இருந்து விரைவில் அகற்றப்படும் என தெரிவித்தது. 


அதன் பிறகு, தங்கள் ட்விட்டர் கணக்கை இந்தியாவில் சுமார் 76 லட்சம் பேர் பின்தொடர்வதாக ஏ.என்.ஐ நிறுவனம் தெரிவித்துள்ளது. 






மைக்ரோ-பிளாக்கிங் தளத்தை இயக்குவதற்கான குறைந்தபட்ச வயது வரம்புகளை பூர்த்தி செய்யாததற்காக ஏசியன் நியூஸ் இன்டர்நேஷனல் (ஏஎன்ஐ) கணக்கை ட்விட்டர் முடக்கப்பட்டுள்ளது என்று ஏஎன்ஐ ஆசிரியர் ஸ்மிதா பிரகாஷ் இன்று தெரிவித்தார். மேலும், ஏஎன்ஐயின் கணக்கு முடக்கப்பட்டுள்ளது என்று  ட்விட்டரில் இருந்து அனுப்பப்பட்ட மெயிலின் ஸ்கிரீன் ஷாட்டையும் ஸ்மிதா பிரகாஷ் பகிர்ந்துள்ளார்.