• இன்று விண்ணில் பாய்கிறது ஜி.எஸ்.எல்.வி.எப்-12 ராக்கெட்..! 


ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரியோட்டாவில் இருந்து இன்று என்.வி.எஸ்-01 செயற்கைக்கோளுடன் விண்ணில் ஏவப்படுகிறது ஜி.எஸ்.எல்.வி.எப்-12 ராக்கெட் ராக்கெட்.  இதற்கான கவுண்டவுன் நேற்று தொடங்கிய நிலையில், இன்று காலை 10.42 மணிக்கு ராக்கெட் ஏவப்படுகிறது. சாலை, கடல் மற்றும் விமான போக்குவரத்துக்கு வழிகாட்டுவதற்காக  மொத்தம் 7 செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது. மேலும் படிக்க



  • மூன்று ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும் பாஸ்போர்ட்டுடன் அமெரிக்காவுக்கு செல்லும் ராகுல் காந்தி..!


3 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும் பாஸ்போர்ட் வழங்கப்பட்ட நிலையில், ராகுல் காந்தி இன்று அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். சமீபத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு புதிய பாஸ்போர்ட் வழங்கக் கோரி தொடுத்த மனுவை  டெல்லி மாவட்ட நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. 10 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும் பாஸ்போர்டை கோரியிருந்த நிலையில்,  3 ஆண்டுகளுக்கு மட்டும் செல்லுபடியாகும் பாஸ்போர்ட் வழங்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க




  • நியாயம் கேட்டு டெல்லியில் போராடிய மல்யுத்த வீரர்கள்.. குண்டுக்கட்டாக தூக்கிச்சென்ற போலீசார் 




பாலியல் சீண்டல் தொடர்பாக டெல்லியல் நியாயம் கேட்டு போராடிய மல்யுத்த வீரர்களை, போலீசார் குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று அப்புறப்படுத்தினர்.டெல்லியில் கட்டப்பட்டுள்ள புதிய நாடாளுமன்ற கட்டடத்தை நோக்கி, ஜந்தர் மந்தர் பகுதியில் போராடிக் கொண்டிருந்த மல்யுத்த வீரர் மற்றும் வீராங்கனைகள் நேற்று பேரணியாக சென்றனர். மேலும் கைது செய்யப்பட்டவர்கள் மகிழ்ச்சியாக காவல்துறை வாகனத்தில் செல்வது போன்ற போலியான புகைப்படம் ஒன்றும் இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் படிக்க



  • அரசு பள்ளியில் வழங்கப்பட்ட உணவில் இறந்து கிடந்த பாம்பு...


பீகார் மாநிலம் பார்பிஸ்கஞ்ச் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட இலவச மதிய உணவில் பாம்பு ஒன்று இறந்து கிடந்த நிலையில் சத்துணவை சாப்பிட்ட 30க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், கல்வி அலுவலர்கள் உள்ளிட்டோர் பள்ளியில் ஆய்வு நடத்தினர்.  மேலும் படிக்க




  • ஆறாவது ஸ்கார்பியன் நீர்மூழ்கிக் கப்பல் ‘வாக்‌ஷீர்’ கடல்வழி ஒத்திகையை தொடங்கியது! 




இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட ஆறாவது நீர்மூழ்கிக் கப்பலான ‘வாக்‌ஷீர்’ (Vaghsheer) கடல்வழி ஒத்திகை பயணத்தைத் தொடங்கியதாக மத்திய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.கடந்த 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் 20, அன்று மசகான் கப்பல் கட்டும் நிறுவனத்திலிருந்து இந்த நீர்மூழ்கிக் கப்பல் அறிமுகப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் படிக்க