- Pen Monument: கடலின் நடுவே பேனா நினைவுச்சின்னம்; அனுமதி அளித்தது மத்திய அரசு..!
தமிழ்நாடு அரசு சார்பில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு சென்னை மெரினாவில் கடலின் நடுவே பேனா நினைவுச்சின்னம் அமைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. இந்த அறிவிப்புக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், மத்திய அரசின் அனுமதிக்கு தமிழ்நாடு அரசு சார்பில் அனுப்பப்பட்டிருந்தது. இந்த நிலையில், கடலின் நடுவே பேனா நினைவுச்சின்னம் அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. மேலும் படிக்க https://tamil.abplive.com/news/tamil-nadu/central-government-give-permission-to-former-chief-minister-karunanidhi-pen-monument-in-chennai-marina-114333/amp
- டெல்லி விமான நிலையத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனைச் சந்தித்த முதலமைச்சர் ஸ்டாலின்..!
தமிழ்நாடு திரும்ப இந்திராகாந்தி விமான நிலையத்திற்கு வந்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விமான நிலையம் வந்திருந்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதா ராமனை சந்தித்து பேசியுள்ளார். மேலும் படிக்க https://tamil.abplive.com/news/politics/tamil-nadu-chief-minister-stalin-met-union-finance-minister-nirmala-sitharaman-at-delhi-airport-114229/amp
- Draupadi Murmu : கிண்டி மருத்துவமனை திறப்பு...ஜூன் 5ஆம் தேதி தமிழ்நாடு வருகிறார் குடியரசுத் தலைவர் முர்மு...!
ஜூன் மாதம் 5ஆம் தேதி கிண்டி பன்னோக்கு மருத்துவமனையை திறந்து வைக்கிறார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு. முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் விடுத்த அழைப்பை ஏற்று சென்னை வந்து மருத்துவமனையை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு திறந்து வைக்கிறார். மேலும் படிக்க https://tamil.abplive.com/news/india/inauguration-of-guidy-hospital-president-is-coming-to-tamil-nadu-on-5th-june-114215/amp
- மின்னல் தாக்கியதில் 15 பேர் பலி… பலர் காயம்; மேற்கு வங்கத்தில் பல பகுதிகளில் நடந்த சோகம்!
மேற்கு வங்கத்தின் நான்கு மாவட்டங்களில் மின்னல் தாக்கி நேற்று முன்தினம் (வியாழக்கிழமை) 15 பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முர்ஷிதாபாத்தில் நான்கு பேரும், மேற்கு மிட்னாபூரில் மூன்று பேரும், ஹவுராவின் பாக்னான் மற்றும் கிழக்கு பர்த்வானில் முறையே மூன்று மற்றும் ஐந்து பேரும் கொல்லப்பட்ட்டுள்ளதாக செய்திகள் வந்துள்ளன. மேலும் படிக்க https://tamil.abplive.com/news/india/15-killed-in-lightning-strike-many-injured-tragedy-in-many-parts-of-west-bengal-114161/amp
- Wrestlers Protest : மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டத்திற்கு முதல் வெற்றி...பாலியல் புகாரில் சிக்கிய பாஜக எம்பிக்கு நெருக்கடி...உச்சநீதிமன்றம் அதிரடி..!
இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும் பாஜக நாடாளுமன்ற உறுப்பினருமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது, மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் புகார் தெரிவித்திருந்த நிலையில், அவருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்படும் என டெல்லி காவல்துறை உச்ச நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் படிக்க https://tamil.abplive.com/news/india/case-against-india-wrestling-federation-chief-brij-bhushan-sharan-singh-today-delhi-police-to-supreme-court-114261/amp
- Rajinikanth - Chandrababu Naidu : திடீர் சந்திப்பு...ரஜினியை வரவேற்ற ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு...நடந்தது என்ன?
மறைந்த ஆந்திர மாநில முதலமைச்சரும் தெலுங்கு திரையுலகின் உச்ச நடிகருமான என்.டி. ராமாராவின் 100வது பிறந்தநாள் விழா நேற்று விஜயவாடாவில் கொண்டாடப்பட்டது. என்.டி.ஆரின் பிறந்தநாள் நிகழ்ச்சிக்காக தமிழ்நாட்டில் இருந்து விஜயவாடா சென்ற ரஜினிகாந்துக்கு, விமான நிலையத்தில் நடிகர் பாலகிருஷ்ணா சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ரஜினிகாந்திற்கு பொன்னாடை அணிவித்து பாலகிருஷ்ணா வரவேற்றார். ரஜினிகாந்தும், அவரை ஆரத்தழுவி அன்பை வெளிப்படுத்தினார். மேலும் படிக்க https://tamil.abplive.com/news/politics/superstar-rajinikanth-meets-former-andhra-pradesh-cm-chandrababu-naidu-know-more-details-here-114319/amp