மேற்கு வங்கத்தின் நான்கு மாவட்டங்களில் மின்னல் தாக்கி நேற்று (வியாழக்கிழமை) 15 பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முர்ஷிதாபாத்தில் நான்கு பேரும், மேற்கு மிட்னாபூரில் மூன்று பேரும், ஹவுராவின் பாக்னான் மற்றும் கிழக்கு பர்த்வானில் முறையே மூன்று மற்றும் ஐந்து பேரும் கொல்லப்பட்ட்டுள்ளதாக செய்திகள் வந்துள்ளன.


எந்தெந்த இடங்களில் மின்னல்


முர்ஷிதாபாத்தில், முதல் சம்பவம் சாலரில் உள்ள ககிராமில் பதிவாகியுள்ளது, இதில் இருவர் கொல்லப்பட்ட நிலையில், மூன்று பேர் காயமடைந்தனர். மூன்றாவது மற்றும் நான்காவது இறப்புகள் முறையே சுதியில் உள்ள பாகல்பூரிலும், சாம்சர்கஞ்சில் உள்ள லக்ஷ்மிநகரிலும் பதிவாகியுள்ளன. மேற்கு மிட்னாப்பூரில் மின்னல் தாக்கியதில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவங்கள் சல்போனி, கோட்வாலி மற்றும் பரத்பூர்-II பகுதிகளில் இருந்து பதிவாகியுள்ளன.



வயலில் வேலை செய்த விவசாயிகள்


கோட்வாலியில், பலியானவர் பைதிநாத் சோரன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். பரத்பூர்- II தொகுதி நிர்வாகத்தின்படி, ஹபீப் சேக் (24) மற்றும் நெக்பஸ் சேக் (26) ஆகிய இரண்டு விவசாயிகள் வயலில் வேலை செய்து கொண்டிருந்தபோது மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளனர். அப்போது ஹெலு சேக், அமினூர் சேக் மற்றும் ஹிரு சேக் ஆகிய மூன்று பேர் காயமடைந்தனர். சுதியில் உள்ள பஹகோல்பூரில், எக்ரம் அலி (69) என்பவர் தனது சணல் வயலை சுத்தம் செய்து கொண்டிருந்தபோது மின்னல் தாக்கி உயிரிழந்தார். மற்றொரு சம்பவம் சம்சர்கஞ்ச் PSக்கு உட்பட்ட லட்சுமிநகரில் நடந்துள்ளது. சலாவுதீன் செய்க் (21) என்ற இளைஞர் உயிரிழந்தார் மேலும் அவரோடு மூவர் காயமடைந்தனர்.


தொடர்புடைய செய்திகள்: வெள்ளிக்கிழமையில் பெண்கள் காலை 9 மணிக்கு பதில் 11 மணிக்கு வேலைக்கு வந்தால் போதும் - புதுச்சேர் முதல்வர் அறிவிப்பு


ஹவுராவில் 6 பேர் உயிரிழப்பு


மின்னல் தாக்கி பர்பா பர்தமான் மாவட்டத்தில் நான்கு பேரும், முர்ஷிதாபாத் மற்றும் வடக்கு 24 பர்கானாஸில் தலா இரண்டு பேரும் உயிரிழந்ததாக பேரிடர் மேலாண்மை துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மேற்கு வங்க காவல்துறை அதிகாரிகள் கூறுகையில், பாஸ்சிம் மிட்னாபூர் மற்றும் ஹவுரா கிராமப்புற மாவட்டங்களில் மேலும் ஆறு இறப்புகள் பதிவாகியுள்ளன. "பாசிம் மிட்னாபூர் மற்றும் ஹவுரா கிராமப்புறங்களில் தலா மூன்று இறப்புகள் பதிவாகியுள்ளன" என்று அந்த அதிகாரி கூறினார்.



பலத்த காற்றும், இடியுடன் கூடிய மழையும்


அவர் கூறுகையில், பலியானவர்கள் பெரும்பாலும் விவசாயிகள் விவசாய வயல்களில் வேலை செய்யும் போது மின்னல் தாக்கி உயிரிழந்தனர் என்றார். கொல்கத்தா, ஹவுரா, நார்த் 24 பர்கானாஸ், புர்பா பர்தாமான் மற்றும் முர்ஷிதாபாத் உட்பட பல தெற்கு வங்காள மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்தது. "அலிபூரில் சரியாக மாலை 4:45 மணிக்கு பலத்த காற்று வீசியது. ஒரு நிமிடத்திற்கும் குறைவான வேகத்தில், அதாவது 79 கிமீ வேகத்தில் காற்று வீசியது. இது ஒரு சூறாவளி அல்ல," என்று இங்குள்ள பிராந்திய வானிலை ஆய்வு மையத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.