•  மத்திய பிரதேசத்தில் ஆட்சிக்கு வந்தால் இலங்கையில் சீதைக்கு கோயில்.. காங்கிரஸ் முதல்வர் வேட்பாளர் கமல்நாத் உறுதி..!


மத்தியப் பிரதேசத்தில் ஆட்சிக்கு வந்தால் இலங்கையில் சீதாவுக்கு கோயில் கட்டுவோம் என காங்கிரஸ் கட்சி வாக்குறுதி அளித்துள்ளது.  நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு மே மாதத்தில் நடைபெறும் என தகவல்கள் கூறப்படும் நிலையில், அதற்கு முன்னதாக 5 மாநில சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. ராஜஸ்தான், மத்திய பிரதேசம், தெலங்கானா, மிசோரம், சட்டீஸ்கர் ஆகிய மாநிலங்களில் தான் தேர்தல் நடக்கவிருக்கிறது. கடந்த அக்டோபர் 9 ஆம் தேதி இதற்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. மேலும் படிக்க..



  • தன்னலமற்ற அறிவுஜீவிகள்.. கம்யூனிஸ்டுகளுக்கு பாராட்டா? ஷாக் கொடுத்த ஆர்.எஸ்.எஸ் தலைவர்..


பாஜகவின் தாய் அமைப்பாக கருதப்படும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு, கடந்த 1925ஆம் ஆண்டு விஜயதசமி நாளன்று தொடங்கப்பட்டது. எனவே, ஆண்டுதோறும் அமைப்பு தொடங்கப்பட்ட விஜயதசமி நாளன்று பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியவர்கள், சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்படுவார்கள். மேலும் படிக்க..



  • நிலத்தை பாதுகாக்கவே ஆயுதங்களை வழிப்படுகிறோம் – பிரதமர் மோடி பேச்சு..


இந்துக்களின் புனித பண்டிகைகளில் ஒன்று தான் நவராத்திரி. இந்தியாவில் நவராத்திரி பண்டிகை  இந்தாண்டு அக்டோபர் 7 ஆம் தேதி தொடங்கி முதல் அக்டோபர் 15 ஆம் தேதி அதாவது விஜயதசமியுடன் இன்று நிறைவடைகிறது. இந்த விழாக் கொண்டாடுவதற்கு பல்வேறு புராணக்கதைகள் கூறப்படுகிறது.  மேலும் படிக்க..



  • I.N.D.I.A கூட்டணிக்கு ஆர்.எஸ்.எஸ் ஆதரவா? உத்தவ் தாக்கரே சிவசேனா போட்ட ஸ்கெட்ச்..


கடந்த 2014ஆம் ஆண்டு முதல் மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜக, தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க முனைப்பு காட்டி வருகிறது. கடந்த இரண்டு மக்களவை தேர்தல்களிலும் 280க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வென்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. இந்த சூழலில், வரவிருக்கும் தேர்தலில் பாஜகவை தோற்கடித்து ஆட்சியை கைப்பற்ற INDIA கூட்டணி பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது. மேலும் படிக்க..



  • ’ போர்ல இறக்கம் எல்லாம் பார்க்கக்கூடாது’ – இஸ்ரேலுக்கு தோளோடு தோள் கொடுத்த பிரான்ஸ் அதிபர்..


அமெரிக்கா மற்றும் பிரிட்டனால் பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்ட ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் தொடுத்து வரும் போர் உலக அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. கடந்த 7ஆம் தேதி, இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்தை சேர்ந்த ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே மோதல் தொடங்கியது.  மேலும் படிக்க..



  • ஆர்.எஸ்.எஸ்ஸை புகழ்ந்து தள்ளிய சங்கர் மகாதேவன்.. அகண்ட பாரதம் குறித்து அசால்ட் பேச்சு..


மகாராஷ்டிர மாநிலம், நாக்பூரில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் ஆண்டு விழாவில் பாடகர் சங்கர் மகாதேவன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பேசியது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. மலையாளம், தமிழ் தொடங்கி பரவலாக இந்திய மொழிகளில் பாடி பிரபல பாடகராகவும் இசையமைப்பாளராகவும் வலம் வருபவர் சங்கர் மகாதேவன். தேசிய விருதுகள், கேரள மாநில விருது, பத்மஸ்ரீ  விருது என பல்வேறு விருதுகளைக் குவித்து தன் கம்பீரக் குரலுக்கு பல மொழி ரசிகர்களையும் பெற்றுள்ளார். குறிப்பாக தமிழில் நடிகர் விஜய்க்கு ‘மச்சான் பேரு மதுர’, ‘நான் அடிச்சா தாங்க மாட்ட’ உள்ளிட்ட பாடல்கள், அஜித், சூர்யாவுக்கு ஓப்பனிங் பாடல்கள் எனப் பாடி ரசிகர்களைக் கவர்ந்துள்ளார். மேலும் படிக்க..