Morning Headlines June 25:



  • இரயில் விபத்து


மேற்கு வங்க மாநிலத்தில் 2  சரக்கு ரயில்கள் மோதிக்கொண்டு கோர விபத்து ஏற்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இச்சம்பவம் இன்று அதிகாலை 4 மணியளவில் ஓண்டா நிலையத்தில் நடைபெற்றுள்ளது. இதில் சரக்கு ரயிலின் ஓட்டுநர் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார். உள்ளூர் ஊடகங்கள் வெளியிட்டுள்ள தகவலின் படி, ஓண்டா நிலையத்தில் வழியாக முன்னால் சென்ற சரக்கு ரயில் மீது பின்னால் வந்து ரயில் மோதியுள்ளது. இந்த விபத்தில் சரக்கு ரயில்களின் 12 பெட்டிகள் தடம்புரண்டது. இரண்டு சரக்கு ரயில்களும் காலியாக இருந்ததால் பொருட்சேதம் பெரியளவில் இழப்பு ஏற்படவில்லை. 


அதேசமயம் இரண்டு ரயில்களும் எப்படி மோதிக்கொண்டன  என்பது தொடர்பாக ரயில்வே துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதேசமயம் தண்டவாளத்தில் பெட்டிகள் சிதறி கிடப்பதால் அந்த வழியாக செல்லும் ரயில்களின் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. எனவே விரைந்து கவிழ்ந்து கிடக்கும் பெட்டிகளை தண்டவாளத்தில் இருந்து அப்புறப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. விரைவில் நிலைமை சீராகும் என அதிகாரிகள் கூறியுள்ளனர். மேலும் வாசிக்க



  • பிரதமர் நரேந்திர மோடி எகிப்து பயணம்


இரண்டு நாட்கள் அரசு முறை பயணமாக பிரதமர் மோடி எகிப்து தலைநகர் கெய்ரோவுக்கு சென்றடைந்தார்.  இந்த பயணம் இந்திய-எகிப்து நாடுகளுக்கு இடையேயோன உறவில் முக்கியமானதாக இருக்கும் என்றே சொல்லப்படுகிறது.


எகிப்து சென்ற மோடி


அமெரிக்காவின் தனது மூன்று நாட்கள் பயணத்தை முடித்துக் கொண்ட பிரதமர் மோடி, அங்கிருந்து இரண்டு நாட்கள் பயணமாக எகிப்து தலைநகர் கெய்ரோவுக்கு சென்றார். மெய்ரோ விமான நிலையத்தில் பிரதமர் மோடியை, எகிப்து பிரதமர் முஸ்தபா உற்சாகமாக வரவேற்றார். 26 ஆண்டுகளுக்கு பிறகு சென்ற இந்திய பிரதமருக்கு சிவப்பு கம்பள வரவேற்புடன் ராணுவ மரியாதையும்  அளிக்கப்பட்டது.மேலும் வாசிக்க..



  • மாறுகிறதா கூட்டணி கணக்கு..?


கடந்த 9 ஆண்டுகளாக மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜகவை வீழ்த்த பல்வேறு எதிர்க்கட்சிகள் வியூகம் அமைத்து வருகின்றன. இன்னும் 9 மாதங்களில் அடுத்த மக்களவை தேர்தல் நடைபெற நிலையில், அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. தேர்தலுக்கு இன்னும் காலம் இருப்பதால் எந்த கூட்டணியில் எந்த கட்சி இடம்பெறும் என்பது தெளிவாகவில்லை.


கே.சி.ஆர் செயல்பாடுகளில் மாற்றம்:


ஆனால், அதற்கு முன்பாக பல திருப்பங்கள் அரங்கேறி வருகிறது. பாஜகவை வீழ்த்த பல்வேறு தலைவர்கள் பல்வேறு விதமான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், முக்கியத்துவம் வாய்ந்த தலைவர் தெலங்கானா முதலமைச்சர் கே. சந்திரசேகர ராவ். தேசிய அளவில் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்க முயற்சி மேற்கொண்டவர்.மேலும் வாசிக்க..


வானிலை அறிவிப்பு - மழைக்கு வாய்ப்பு


தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று அடுத்த 3 மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி கடலூர், நாகப்பட்டினம், அரியலூர், திருச்சி, பெரம்பலூர், கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் இலேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வாசிக்க..


வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 


வடமேற்கு வங்கக்கடலில் அதை ஒட்டியுள்ள ஒடிசா, மேற்கு வங்கம் அருகே புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. 


தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்பு


தமிழ்நாடு, புதுச்சேரியில் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.