• 2000 ரூபாய் நோட்டை மாற்ற ஆவணம் தேவையா..? எஸ்.பி.ஐ. சொல்வது என்ன?




மத்திய அரசால் தடை செய்யப்பட்ட 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு, கட்டுப்பாடுகளுடன், எந்த ஆவணங்களும் தேவையில்லை என எஸ்பிஐ வங்கி விளக்கமளித்துள்ளது. முன்னதாக நாடு முழுவதும்  செப்டம்பர் 30-ந் தேதி வரை மட்டுமே 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. மே 23ம் தேதி முதல் பொதுமக்கள் 2000 ரூபாய் நோட்டுகளை வங்களில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் படிக்க




  • மோடியின் காலில் விழுந்த பப்புவா நியூ கினியா பிரதமர்...! என்ன காரணம் தெரியுமா..?




பப்புவா நியூ கினியா சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு அந்நாட்டு பிரமர் ஜேம்ஸ் மராபே தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது, ஜேம்ஸ் மராபே, மோடியின் கால்களை தொட்டு வணங்கினார். அவரை மோடி கட்டித் தழுவி தனது நட்புணர்வை வெளிப்படுத்தினார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் படிக்க



  • இந்து பெயரில் கடை நடத்திய இஸ்லாமியர்.. பெயரை மாற்றச் சொல்லி பிரச்சினை செய்த பஜ்ரங்தள் உறுப்பினர்கள்


டெல்லியில் இந்து பெயரில் கடை நடத்தி வந்த இஸ்லாமியரை பஜ்ரங்தள் கட்சியினரை தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்து மதத்தை சார்ந்த உரிமையாளர் தனது கடையை இஸ்லாமியர் ஒருவருக்கு வாடகைக்கு விட்டார். அதேசமயம் இந்து பெயரிலேயே கடையை நடத்த வேண்டும் என உரிமையாளர் உத்தரவிட்டிருந்தார். இதனை எதிர்த்து பஜ்ரங் தள் உறுப்பினர்கள் பிரச்சனை செய்துள்ளனர். மேலும் படிக்க



  • இன்று கூடுகிறது கர்நாடகா சட்டப்பேரவை - எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்றுக் கொள்கின்றனர்   


கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து கடந்த 20 ஆம் தேதி முதலமைச்சராக சித்தராமையா, துணை முதல்வராக டி.கே.சிவக்குமார், 8 அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர். இதனைத் தொடர்ந்து இன்று சட்டப்பேரவை கூட்டம் தொடங்குகிறது. இன்று முதல் மே 25 ஆம் தேதி வரை நடைபெறும் கூட்டத்தொடரில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.க்கள் பதவி பிரமாணம் எடுத்துக் கொள்கின்றனர். இந்த கூட்டத்தொடரில் சட்டப்பேரவை தலைவர் தேர்வு செய்யப்பட உள்ளார்.




  • போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மல்யுத்த வீராங்கனைகளுக்கு குவியும் ஆதரவு - பாஜக எம்பிக்கு சிக்கல்..!




டெல்லி ஜந்தர் மந்தரில் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும் பாஜக நாடாளுமன்ற உறுப்பினருமான பிரிஜ் பூஷன் சரண் சிங்குக்கு எதிராக மல்யுத்த வீரர்கள், வீராங்கனைகள் இணைந்து கடந்த ஒரு மாதமாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.  இதனிடையே வீராங்கனைகளுக்கு ஆதரவு தெரிவிப்பதாக சிரோமணி குருத்வாரா நிர்வாகக் குழு அறிவித்துள்ளது. மேலும் படிக்க