தமிழ்நாடு:
- தொழில் முதலீடுகளை ஈர்க்க இரண்டு நாள் பயணமாக முதலமைச்சர் ஸ்டாலின் நாளை சிங்கப்பூர் செல்கிறார் - அதை முடித்துக்கொண்டு ஜப்பான் செல்ல திட்டம்
- கள்ளச்சாரயம், கள்ளச்சந்தையில் மதுவாங்கி குடிந்து உயிரிழந்த விவகாரம் தொடர்பாக, இன்று ஆளுநரை சந்திக்கிறார் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி
- தி கேரளா ஸ்டோரி படத்தைப் பார்த்தேன். ஒரு மெல்லிய கொடூரமான யதார்த்தத்தை அம்பலப்படுத்தியதற்கு நன்றி - ஆளுநர் ரவி டிவிட்டர் பதிவு
- கிராம ஊராட்சிகளில் பொதுமக்கள் வரி செலுத்துவதற்காக புதிய இணையதளம் தொடக்கம் - எந்தவொரு கட்டணத்தையும் ரொக்கமாக பெறக்கூடாது என தமிழ்நாடு அரசு உத்தரவு
- தஞ்சையில் மது அருந்தி 2 பேர் உயிரிழந்த விவகாரம் - சட்டவிரோதமாக மதுபானம் விற்ற பாருக்கு அதிகாரிகள் சீல் - மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் நடவடிக்கை
- தஞ்சையில் மது அருந்தி 2 பேர் உயிரிழப்பு - மதுவில் சயனைடு கலந்து இருந்ததாக உடற்கூராய்வில் தகவல் - குடும்ப பிரச்னை காரணமாக நடைபெற்றதாக மாவட்ட ஆட்சியர் தகவல்
- அரசுப்பேருந்துகளில் 2000 ரூபாய் நோட்டுகளை வாங்க வேண்டாம் - நடத்துனர்களுக்கு போக்குவரத்து கழகம் அறிவுறுத்தல்
- கருணாநிதிக்கு ஒவ்வொரு மாவட்டத்திலும் முழு உருவ சிலை அமைக்க திட்டம் - திமுக உயர்நிலை செயல்திட்ட குழு கூட்டத்தில் தீர்மானம்
இந்தியா:
- பப்புவா நியூ கினியா சென்ற பிரதமர் நரேந்திர மோடியின் காலில் விழுந்து அந்நாட்டு பிரமர் ஜேம்ஸ் மராபே உற்சாக வரவேற்பு - சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு அந்நாட்டிற்கு வருகை தரும் உலக தலைவர்களை இப்படி வரவேற்பது வழக்கம்
- ராஜஸ்தான், தெலங்கான உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தலை சந்திக்க காங்கிரஸ் தீவிரம் - 24ம் தேதி கட்சி தலைவர்களுடன் கார்கே முக்கிய ஆலோசனை
- புதியதாக கட்டப்பட்டுள்ள நாடாளுமன்ற கட்டடத்தை பிரதமர் மோடி திறக்க எதிர்ப்பு - குடியரசு தலைவர் தான் திறந்து வைக்க வேண்டும் என வலியுறுத்தல்
- சபரிமலைக்கு பொருட்கள் கொண்டு செல்ல பம்பையில் இருந்து சன்னிதானம் வரையில் கேபிள் கார் அமைக்க ஒப்பந்தம்
- திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க ஜூலை, ஆகஸ்ட் மாதங்களுக்கான ரூ.300 டிக்கெட் நாளை மறுநாள் வெளியீடு - 12 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்யும் பக்தர்கள்
உலகம்:
- பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் பைடன் உள்ளிடோர் கலந்துகொண்ட, ஜி7 மாநாட்டில் உக்ரைன் பிரச்னை குறித்து ஆலோசனை
- மெக்சிகோவில் துணிகரம் - கார் பந்தயத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 10 வீரர்கள் பலி
- இத்தாலியின் மவுண்ட் எட்னாவில் தீப்பிழம்பை கக்கும் எரிமலை - விமான சேவை ரத்து
- எல் சால்வடாரில் கால்பந்து மைதானத்திற்குள் அத்துமீறி நுழைந்த ரசிகர்கள் - கூட்ட நெரிசலில் சிக்கி 12 பேர் பலி
விளையாட்டு:
- ஐபிஎல் தொடரிலில் பெங்களூரு அணியை வீழ்த்தி குஜராத் அணி அபாரம் - கோலியின் வரலாற்று சதம் வீண்
- தோல்வியால் தொடரிலிருந்து வெளியேறியது பெங்களுரூ அணி - 10வது முறையாக பிளே-ஆஃப் சுற்றிற்கு முன்னேறியுள்ளது மும்பை
- ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் முதல் குவாலிபையர் போட்டியில் குஜராத் - சென்னை அணிகள் பலபரீட்சை