ஜம்மு-காஷ்மீரில் குண்டு வீசியும், துப்பாக்கிகளால் சுட்டும் தீவிரவாத தாக்குதல்.. ராணுவ வீரர்கள் 5 பேர் உயிரிழப்பு
ஜம்மு - காஷ்மீரில் தீவிவரவாதிகள் நடத்திய தாக்குதலில் 5 ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். தாக்குதல் நடத்திய நபர்களை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. ராணுவத்திற்கு சொந்தமான வாகனம் ஒன்று ரஜோரி-பூஞ்ச் தேசிய நெடுஞ்சாலையில் பிம்பர் காலி பகுதியில் இருந்து சாங்கியோட் நோக்கி சென்றுகொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. மேலும் படிக்க
ராகுல்காந்தி மேல்முறையீட்டு மனு தள்ளுபடி: சூரத் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பிரதமர் மோடி குறித்தும் மோடி என்ற பெயர் குறித்து அவதூறாக பேசிய விவகாரத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை சூரத் மாவட்ட செசன்ஸ் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. முன்னதாக இந்த வழக்கில் தனக்கு இரண்டு ஆண்டுகள் சிறைதண்டனை விதித்த கீழமை நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக ராகுல் மேல்முறையீடு செய்திருந்தார். மேலும் படிக்க
நெருங்கும் கர்நாடகத் தேர்தல்: காரில் கட்டுக்கட்டாக சிக்கிய பணம் - அதிகாரிகள் அதிர்ச்சி
கர்நாடகாவில் உரிய ஆவணங்களின்றி காரில் கொண்டு செல்லப்பட்ட ஒன்றரை கோடி ரூபாயை போலீசார் பறிமுதல் செய்தனர். அங்கு சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் 10ஆம் தேதி நடைபெறவுள்ளதையொட்டி மாநிலம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில் கர்நாடகா பெலகாவி மாவட்டம் ராமதுர்கா என்ற பகுதியில் காவல்துறையினர் நடத்திய வாகன சோதனையில் இந்த பணம் பிடிபட்டுள்ளது. மேலும் படிக்க
ராகுல் காந்தியின் குரலை ஒடுக்க முடியாது...மக்களுக்காக தொடர்ந்து பேசுவார்...தீர்ப்பை தொடர்ந்து காங்கிரஸ் கருத்து
அவதூறு வழக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை சூரத் மாவட்ட செசன்ஸ் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இந்த நிலையில், ராகுல் காந்தியின் குரலை அடக்க முடியாது, அவர் மக்களுக்காக தொடர்ந்து பேசுவார் என காங்கிரஸ் கட்சி கருத்து தெரிவித்துள்ளது. மேலும் படிக்க
குஜராத் கலவரங்கள் வழக்கு...குற்றமற்றவராக அறிவிக்கப்பட்ட குஜராத் முன்னாள் அமைச்சர்
உலகம் முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்திய குஜராத் நரோடா பாட்டியா கிராம படுகொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மாநில முன்னாள் அமைச்சர் மாயா கோட்னானி உட்பட 67 பேரும் விடுதலை செய்யப்பட்டனர். அகமதாபாத்தின் நரோடா காம் பகுதியில் நடைபெற்ற கலவரத்தில் 11 இஸ்லாமியர்கள் உயிருடன் வைத்து கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் படிக்க
கொளுத்தியெடுக்கும் வெயில்...பள்ளிகளுக்கு முன்கூட்டியே விடுமுறை அறிவித்த ஒடிசா அரசு...!
கோடை வெயில் காரணமாக ஒடிசாவில் இன்று முதல் அனைத்து பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.அடுத்த சில நாள்களுக்கு ராஜஸ்தான், ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா, ஒடிசா, பிகார் ஆகிய மாநிலங்களில் வெப்ப அலை வீசும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் படிக்க