• வெளியானது கர்நாடகா காங்கிரஸ் அரசின் முதற்கட்ட அமைச்சரவை பட்டியல்  - 10 பேர் இன்று பதவியேற்பு 


சமீபத்தில் நடைபெற்ற கர்நாடகா சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் அரசு பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து கர்நாடகாவின் புதிய அமைச்சராக சித்தராமையா இன்று பதவியேற்கிறார். துணை முதலமைச்சராக டி.கே.சிவக்குமாரும் பதவி ஏற்க உள்ளார். இந்நிலையில் இன்று பதவியேற்கும் 8 அமைச்சர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் பரமேஸ்வரா, கே.எச். முனியப்பா, கே.ஜே. ஜார்ஜ், எம்.பி. பாட்டீல், சதீஸ் ஜர்கிஹோலி, பிரியங் கார்கே, ராமலிங்க ரெட்டி, சமீர் அகமது ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். மேலும் படிக்க



  • திருப்பதியில் அதிர்ச்சி சம்பவம்.. 35 ஆயிரம் லட்டுகள் திருடி வெளிச்சந்தையில் விற்பனை


திருப்பதி ஏழுமலையான் கோயிலில் லட்டுகள் திருடி வெளிச்சந்தையில் விற்கப்பட்ட சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேவஸ்தான பறக்கும் படை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்த நிலையில் நடைபெற்ற கண்காணிப்பு வேட்டையில் ஊழியர்கல் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இதுவரை 35 ஆயிரம் லட்டுகள் திருடியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க



  • ரூபாய் 2 ஆயிரம் நோட்டுகளும் செல்லாது - ரிசர்வ் வங்கி அதிரடி 


நாடு முழுவதும் ரூபாய் 2 ஆயிரம் புழக்கத்தில் இருந்து நீக்கப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. ஏற்கனவே ரூபாய் 2 ஆயிரம் நோட்டுகள் குறைந்த அளவே அச்சடிக்கப்பட்டு வந்தது. இப்படியான சூழலில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செப்டம்பர் 30-ந் தேதி வரை மட்டுமே செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நாள் ஒன்றுக்கு ரூ.20 ஆயிரம் மதிப்பிலான நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க



  • மசூதியில் சிவலிங்கமா..? தொல்லியல் ஆய்வுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை..! 


உத்தர பிரதேசத்தில் உள்ள ஞானவாபி மசூதியில் சிவலிங்கம் போன்ற சிலை இருப்பதாக சர்ச்சை எழுந்த நிலையில், சிலையின் தொன்மையை கண்டறிய தொல்லியல் ஆய்வு மேற்கொள்ள இந்திய தொல்லியல் துறைக்கு அலகாபாத் உயர நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தொல்லியல் ஆய்வை மேற்கொள்ள உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. மேலும் படிக்க



  • அடுத்த 3 நாட்கள்.. இந்தியாவில் வீசப்போகுது வெப்ப அலை..!


வட இந்தியாவில் 5 மாநிலங்களில் அடுத்த 3 நாட்களுக்கு வெப்ப அலை வீசும் அபாயம் உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. உத்தரபிரதேசம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், ஜார்கண்ட், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் 23 ஆம் தேதி வரை  வெப்ப அலை வீசும்  எனவும்,  வழக்கத்தை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகமாக இருக்கும்  எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க