கோடை காலம் வந்தாலே வெயில் வாட்டி வதைக்கும். இந்தாண்டிற்கான கோடை காலம் தமிழ்நாட்டில் வித்தியாசமாகவே அமைந்தது. தென் தமிழகத்தில் சில மாவட்டங்களில் மழை பொழிந்து வருகிறது. அதேசமயம். வட மாவட்டங்களில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. குறிப்பாக, தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது.


வெப்ப அலை வீசும்:


தமிழ்நாடு மட்டுமின்றி வட இந்தியாவிலும் வெயில் கொளுத்தி வருகிறது. இதனால், வட இந்தியாவில் மக்கள் மிகுந்த சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையம் வெப்ப அலை எச்சரிக்கை விடுத்துள்ளது. அவர்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், உத்தரபிரதேச மாநிலத்தின் தெற்கு பகுதியில் நாளை முதல் வரும் 22-ந் தேதி வரை ( அதாவது 20-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை) வெப்ப அலை வீசக்கூடும்.




அதேபோல, நாளை மற்றும் நாளை மறுநாள் ராஜஸ்தான் மாநிலத்தின் மேற்கு பகுதி மற்றும் மத்திய பிரதேசம் மாநிலத்தின் வடக்கு பகுதியில் வெப்ப அலை வீசும் அபாயம் உள்ளதாகவும் கூறப்படுகிறது. சட்டீஸ்கர் மற்றும் கிழக்கு ஜார்க்கண்ட் மாநிலத்தில் நாளை மறுநாள் முதல் வரும் 23-ந் தேதி வரை வெப்ப அலை வீசும் அபாயம் உள்ளதாகவும் இந்திய வானிலை மையம் எச்சரிக்கப்பட்டுள்ளது.






ஏற்கனவே மேலே குறிப்பிட்டுள்ள மாநிலங்களில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இந்த சூழலில், வெப்ப அலை வீசும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருப்பதால் மக்கள் மிகுந்த அவதிக்கு ஆளாகியுள்ளனர். மேலும், அடுத்த 2 நாட்களுக்கு வழக்கத்தை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகமாக இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.


வாட்டி வதைக்கும் வெயில்:


வெப்ப அலை வீசும் அபாயம் இருப்பதால் மெல்லிய ஆடைகளையும், மென்மையான வண்ணங்கள் கொண்ட ஆடைகளையும், கதர் ஆடைகளையும் அணியுமாறு வானிலை ஆய்வுமையம் அறிவுறுத்தியுள்ளது. மேலும், வெளியில் செல்லும்போது உடலை துணியால் மூடிக்கொள்வதும், குடை எடுத்துக்கொண்டு செல்வதும் நல்லது என்றும் அறிவுறுத்தியுள்ளது.


மேலும், வீட்டிலே தயாரிக்கப்பட்ட பழச்சாறுகளை அடிக்கடி பருகுவது நல்லது ஆகும்.  உதாரணத்திற்கு லஸ்ஸி, தர்பூசணி, மோர் போன்றவற்தைற அடிக்கடி பருக வேண்டும். உடலில் நீரேற்றம் குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டுமு் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.


தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே வெயில் வாட்டி வதைத்து வருகிறது. குறிப்பாக, நண்பகல் வேளைகளில் வெளியில் வர முடியாத அளவிற்கு வெயில் வாட்டி வதைத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க: TN Rain Alert: தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு மழை நீடிக்கும்.. வெயில் எப்படி இருக்கும்? இன்றைய வானிலை அப்டேட் இதோ..


மேலும் படிக்க: Annamalai on Senthil Balaji: “ஆளுநரிடம் மனு கொடுக்க உள்ளோம்” - செந்தில் பாலாஜிக்கு நெருக்கடி கொடுக்கும் அண்ணாமலை