Lays Off: எண்ட் இல்லாமல் தொடரும் பணி நீக்கம்...மேலும் ஆயிரம் பேரை வீட்டுக்கு அனுப்பிய பைஜூஸ் நிறுவனம்..!
கடந்து ஆண்டு அக்டோபர் மாதம் முதல் தொடர்ந்து பணிநீக்க நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. கடந்த ஆண்டு 2,500 ஊழியர்களையும், இந்த ஆண்டு 1,500 ஊழியர்களையும் பணிநீக்கம் செய்தது பைஜூஸ். மேலும் பணிநீக்கங்கள் மேற்கொள்ளப்படாது என்று சிஇஓ ரவீந்தரன் தெரிவித்திருந்த நிலையில், மேலும் ஆயிரம் பேரை பணிநீக்கம் செய்துள்ளது பைஜூஸ் நிறுவனம். மேலும் படிக்க https://tamil.abplive.com/news/india/byju-lays-off-close-to-1000-employees-across-all-departments-know-more-details-here-124084/amp
Delhi Murder : கத்தியால் குத்தி கொல்லப்பட்ட மகன்...செய்தியாளர்கள் முன்பு கதறி அழுத தந்தை...மனதை உலுக்கும் டெல்லி சம்பவம்..!
ஜூன் 18ஆம் தேதி டெல்லியில் கல்லூரிக்கு வெளியே மாணவர்கள் சிலர் குத்தியதில், இளைஞர் ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இறந்தவர், 19 வயதான நிகில் சவுகான் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இந்நிலையில், கொலை செய்யப்பட்ட நிகில் சவுகானின் தந்தை இன்று செய்தியாளர்கள் முன்பு கதறி அழுந்துள்ளார். அப்போது அவர் பேசியதாவது, "ஞாயிற்றுக்கிழமை நண்பகலில் தனது மகன் கத்தியால் குத்தப்பட்டதாக தனக்கு அழைப்பு வந்தது. இது குறித்து செய்தி அறிந்ததும் நாங்கள் மருத்துவமனைக்குச் சென்றோம். அங்கு எங்கள் மகன் இறந்துவிட்டதாக தெரிவித்தது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. என்னால் இந்த துயரத்தை தாங்க முடியவில்லை” என்று கூறினார். மேலும் படிக்க https://tamil.abplive.com/news/india/delhi-murder-delhi-university-student-father-breaks-down-media-case-filed-2-arrested-123972/amp
இரு நாடுகளின் நல்லுறவில் மிக முக்கிய மைல் கல்லாக அமையும்...மோடியின் அமெரிக்க பயணம் குறித்து வெளியுறவு அமைச்சகம் விளக்கம்..!
அமெரிக்க அதிபர் ஜோ பைடன், அந்நாட்டின் முதல் பெண்மணி ஜில் பைடன் ஆகியோரின் அழைப்பின் பேரில், பிரதமர் மோடி ஜூன் 21 முதல் ஜூன் 24 வரை அமெரிக்கா செல்கிறார். வரலாற்றுச் சிறப்புமிக்க வகையில், ஜூன் 22ஆம் தேதி நடைபெறும் அமெரிக்க நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார். மேலும் படிக்க https://tamil.abplive.com/news/india/pm-modi-america-visit-a-milestone-of-bilateral-relationship-says-foreign-secretary-kwatra-124034/amp
Adani and IRCTC : இந்தியன் ரயில்வேஸுக்கு போட்டியாக மாறுகிறதா அதானி குழுமம்..? என்னதான் நடக்கிறது?..ஐஆர்சிடிசி விளக்கம்..!
இந்தியன் ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் (IRCTC) நிறுவனம் மூலம்தான் இந்தியன் ரயில்வே டிக்கெட்டுகள் விற்கப்படுகிறது. அதேபோல, ரயில்வே டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதற்கும் ரயில்கள் தொடர்பான தகவல்களை பெறுவதற்கும் ட்ரெயின்மேன் செயலி பயன்படுகிறது. இந்நிலையில், அதானி குழுமம், ட்ரெயின்மேன் செயலியை வாங்க உள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தது. தற்போது, ஐஆர்சிடிசி அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் படிக்க https://tamil.abplive.com/news/india/irctc-rebut-congress-leader-jairam-ramesh-adani-takeover-charge-know-more-details-here-124004/amp
இந்திய மருந்தை பயன்படுத்தியதால் விபரீதம்? சிகிச்சை பெற்று வந்தவர் மர்ம மரணம்...காம்பியாவை தொடர்ந்து இலங்கையில் அதிர்ச்சி..!
இந்தியாவில் தயாரிக்கப்படும் மருந்துகள் தரமற்று இருப்பதாக தொடர் குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. சமீபத்தில், மேற்கு ஆப்பிரிக்க நாடான காம்பியாவிலும் உஸ்பெக்கிஸ்தானிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மருந்தை உட்கொண்டதால் 60க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. மேலும் படிக்க https://tamil.abplive.com/news/india/indian-medicines-under-scrutiny-in-sri-lanka-over-a-series-of-adverse-events-know-more-details-here-123930/amp