- Bjp Allies: எதிர்க்கட்சிகளுக்கு எதிரான வியூகத்துக்காக பாஜக கூட்டம்.. இன்று டெல்லி பறக்கும் எடப்பாடி பழனிசாமி!
நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில், அனைத்து கட்சிகளும் தேர்தலை சந்திக்க திட்டம் வகித்து வருகின்றன. அந்த வகையில், மத்தியில் ஆளும் பாஜக கட்சி தங்களது கூட்டணி கட்சிகளை ஒன்றிணைத்து இன்று டெல்லியில் கூட்டம் ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளது.
டெல்லியில் நடைபெறும் இந்த கூட்டத்தில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள அனைத்து கட்சிகளும் பங்கேற்கின்றனர். அதன்படி, தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அதிமுக கட்சியும் இந்த கூட்டத்தில் பங்கேற்கிறது. அதிமுக பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமி இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள இருக்கிறார். மேலும் படிக்க
- Oommen Chandy Passes Away: அதிகாலையில் சோகம்.. முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டி மரணம்.. கேரளா காங்கிரஸ் அறிவிப்பு
உடல்நலக் குறைவால் பெங்களூரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உம்மன் சாண்டி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அவருக்கு வயது 79. புற்றுநோய் காரணமாக பாதிக்கப்பட்ட உம்மன் சாண்டி அதற்காக ஜெர்மனியில் சிகிச்சை பெற்றார். நடப்பாண்டு தொடக்கத்தில் ஜெர்மனியில் இருந்து கேரளம் திரும்பிய அவர், பேசும் திறனையும் 90 சதவீதத்திற்கு மேல் இழந்திருந்தார்.
அதைதொடர்ந்து, கடந்த பிப்ரவரி மாதம் நிமோனியாவால் பாதிக்கப்பட்டு திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு அவரது உடல்நிலை மேலும் மோசமடையவே, சிறப்பு சிகிச்சைக்காக ஏர் ஆம்புலன்ஸ் மூலம் பெங்களூரு அழைத்துச் செல்லப்பட்டார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உம்மன் சாண்டி இன்று காலமானார். அவரின் உடல் கேரளா கொண்டுச் செல்லப்பட்டு அங்கு அவருக்கு இறுதி சடங்குகள் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க
- Opposition Meet: "அரசியல் சூழலை மாற்றியமைக்கப்போகும் எதிர்க்கட்சிகளின் கூட்டம்?" நாட்டை திரும்பி பார்க்க வைத்த பெங்களூரு
கடந்த இரண்டு மாதங்களில் இரண்டாவது முறையாக நாட்டின் முக்கிய தலைவர்கள் பெங்களூருவில் கூடுகின்றனர். முதல் முறையாக, கடந்த மே மாதம், கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா பதவியேற்பு விழாவுக்கு எதிர்க்கட்சி தலைவர்கள் சென்றிருந்தனர்.
கடந்த மாதம், பிகார் மாநிலம் பாட்னாவில் எதிர்க்கட்சிகளின் முதல் கூட்டம் நடைபெற்றது. இரண்டாவது கூட்டம், காங்கிரஸ் ஆளும் இமாச்சல பிரதேசத்தில் நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால், வானிலை காரணமாக பெங்களூருவுக்கு மாற்றப்பட்டது. தொகுதி பங்கீடு, குறைந்தபட்ச செயல் திட்டம் உள்ளிட்ட விவகாரங்களில் அனைத்து கட்சிகளிடையேயும் ஒருமித்த கருத்து எட்ட வைக்கும் வகையில் எதிர்க்கட்சிகளின் கூட்டம் தொடரந்து நடத்தப்படும் என கூறப்படுகிறது. மேலும் படிக்க
- U.P. Youtuber: ஆத்தி..1 கோடி ரூபாயா? வீடியோ வெளியிட்டு வருமானத்தை ஈட்டிய யூடியூபர்..ரெய்டு நடத்தி ஷாக் கொடுத்த வருமான வரித்துறை
உத்தர பிரதேசத்தில் யூடியூபர் ஒருவரின் வீட்டில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் 24 லட்சம் ரூபாய் ரொக்கம் கிடைத்துள்ளது. யூடியூபரின் பெயர் தஸ்லீம் என்பது தெரிய வந்துள்ளது. பல ஆண்டுகளாக யூடியூப் சேனலை நடத்தி, கிட்டத்தட்ட 1 கோடி ரூபாயை இவர் சம்பாதித்திருக்கிறார். மேலும் படிக்க