Chandrayaan 3 Travel: ”3-வது கட்டமும் சக்ஸஸ், அடுத்த 19 நாள் இதுதான் வேலை” .. கச்சிதமாக முன்னேறும் சந்திரயான் 3 விண்கலம்
கடந்த 2019ம் ஆண்டு விண்ணில் செலுத்தப்பட்ட சந்திரயான் 2 விண்கலத்தின் தோல்வியின் மூலம் கிடைத்த படிப்பினைகளை கொண்டு 4 ஆண்டுகால முயற்சிகளுக்குப் பிறகு, சந்திரயான் 3 விண்கலம் கடந்த 14ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. அடுத்ததாக, 40 நாட்கள் பயணம் செய்து ஆகஸ்ட் 23-ஆம் தேதி மாலை 5.47 மணியளவில் நிலவில் தரையிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் முக்கியமாக 10 கட்டங்கள் இடம்பெற்றுள்ளன. அதில் எல்.வி.எம் 3 ராக்கெட் பூமியின் தரைப்பரப்பில் இருந்து 170 கிலோமீட்டர் உயரத்திற்கு சந்திரயான் 3 விண்கலத்தைக் கொண்டு சென்று நிலைநிறுத்தியது தான் முதற்கட்டம். அது வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது மேலும் படிக்க,
PM Narendra Modi: இந்த பிரச்சனைகளில் இருநாடுகளும் இணைந்து செயல்பட முடிவு - பிரதமரிடம் அமீரக தலைவர் வாக்குறுதி
ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைவர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் நேற்று அதாவது ஜூலை 15ஆம் தேதி அபுதாபியில் சந்தித்தனர்.மேலும் படிக்க,
Rahul Gandhi Case: உச்சநீதிமன்றத்திற்கு சென்ற ராகுல் காந்தி.. 2 ஆண்டு கால சிறை தண்டனை எதிர்த்து மனுதாக்கல்..!
மோடி பெயரில் உள்ளவர்கள் குறித்து விமர்சித்ததற்காக அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை வழங்கியது சூரத் நீதிமன்றம். இதன் காரணமாக 2 ஆண்டு சிறை தண்டனை காரணமாக ராகுல் காந்தியின் எம்.பி பதவி பறிக்கப்பட்டது. இதையடுத்து, 2 ஆண்டு கால சிறை தண்டனை வழங்கிய தீர்ப்பை நிறுத்தி வைக்க குஜராத் உயர்நீதிமன்றம் மறுத்த நிலையில் ராகுல் காந்தி மேல்முறையீடு செய்துள்ளார். மேலும் படிக்க,
Opposition Strategy: பாஜகவை வீழ்த்த பெரிய பிளான்..ஆனால், இந்த பிரச்னைல்லாம் இருக்கே..எதிரெதிர் துருவங்களாக இருக்கும் எதிர்க்கட்சிகள் இணையுமா?
சுதந்திர இந்தியா கடந்து வந்த அரசியல் பாதையை மூன்றாக பிரிக்கலாம். முதலாம் பகுதி, காங்கிரஸ் ஆதிக்கம் செலுத்திய காலம். முதல் தேர்தல் நடத்தப்பட்ட 1952ஆம் ஆண்டு முதல் 1990கள் வரையில், காங்கிரஸை சுற்றிதான் இந்திய அரசியல் சுழன்றது. அது வகுத்து கொள்கைதான், நாட்டை நிர்வகித்தது. 1977ஆம் ஆண்டு, காங்கிரஸ் தோல்வி அடைந்த போதிலும், மூன்றே ஆண்டுகளில் கட்சியை ஆட்சி கட்டிலில் அமர வைத்தார் இந்திரா காந்தி. இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி படுகொலைக்கு பிறகு, காங்கிரஸ் கட்சி, தன்னுடைய பலத்தை இழக்க தொடங்கியது. மேலும் படிக்க,
Ajit Pawar : சரத் பவாரின் வீட்டுக்கு சென்ற அஜித் பவார்..முடிவுக்கு வருகிறதா மோதல்? அங்கதான் ட்விஸ்ட்
மகாராஷ்டிர அரசியலில் உச்சக்கட்ட திருப்பமாக, எதிர்க்கட்சியாக இருந்த தேசியவாத காங்கிரஸ், அக்கட்சியின் தேசிய தலைவர் சரத் பவாரின் ஒப்புதலின்றி, ஆளும் பாஜக - சிவசேனா கூட்டணி அரசாங்கத்தில் இணைந்தது. தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான அஜித் பவார் துணை முதலமைச்சராக பொறுப்பேற்று கொண்டார். அவருடன், அக்கட்சியை சேர்ந்த 8 மூத்த தலைவர்கள், அமைச்சர்களாக பதவியேற்று கொண்டனர். மேலும் படிக்க,