• துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு இருப்பு நிலையை கண்காணிக்க மாநில அரசுகளுக்கு உத்தரவு..


மாநிலங்களில் துவரம் பருப்பு மற்றும் உளுத்தம் பருப்பின் இருப்பு நிலையையும், மாநில அரசுகளால் இருப்பு வரம்புகள் அமலாக்கம் பற்றியும் ஆய்வு செய்வதற்கான கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் துவரம் பருப்பு மற்றும் உளுத்தம் பருப்பின் விலையைத் தொடர்ந்து கண்காணிக்குமாறும், கையிருப்பு நிலைமைகளை சரிபார்த்து இருப்பு வரம்பு உத்தரவை மீறுவோருக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்குமாறும் மாநில அரசுகளை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. மேலும் படிக்க



  • அவதூறு வழக்கில் ராகுல் காந்தி, சித்தராமையா, டி கே சிவகுமாருக்கு சம்மன்..!


அவதூறு வழக்கில் ராகுல் காந்தி, கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, துணை முதலமைச்சர் டி.கே. சிவகுமார் ஆகியோருக்கு தலைமை பெருநகர மாஜிஸ்திரேட் சம்மன் அனுப்பியுள்ளார். கடந்த மே 9ஆம் தேதி, கர்நாடக பாஜக தலைவர் கேசவபிரசாத் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில், "மே 5ஆம் தேதி, காங்கிரஸ் சார்பில் செய்தித்தாள்களில் விளம்பரம் ஒன்று வெளியிடப்பட்டதாகவும் அதில், அரசு ஒப்பந்தங்களில் பாஜக அரசாங்கம் 40 சதவீத ஊழலில் ஈடுபட்டதாகவும், முந்தைய நான்கு ஆண்டுகளில் 1.5 லட்சம் கோடி ரூபாய் கொள்ளையடித்ததாகவும் குறிப்பிட்டிருந்தது. மேலும் படிக்க



  • 24 மணிநேரத்தில் 9 பேர் கொலை..மணிப்பூரில் தொடரும் வன்முறை..என்னதான் நடக்கிறது..?


மணிப்பூரில் தொடரும் வன்முறை சம்பவங்கள் நாட்டையே உலுக்கி வருகிறது. வன்முறை சம்பவங்களை தடுக்க மத்திய, மாநில அரசின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் வன்முறை சம்பவங்களால் ஒரு பெண் உள்பட 9 பேர் கொல்லப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களில் பலர் சிகிச்சைக்காக இம்பாலுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.  ​​மணிப்பூரின் 16 மாவட்டங்களில் 11 மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளன. வன்முறையைத் தூண்டும் வதந்திகளைத் தடுக்க மாநிலம் முழுவதும் இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க




  • இன்று கரையை கடக்கும் பிபர்ஜாய் புயல்.. கடலோர பகுதி மக்களுக்கு எச்சரிக்கை..! 




பிபர்ஜாய் புயல் காரணமாக குஜராத் கடலோர பகுதிகளில் இருக்கும் 8000 பேர் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்த புயல் இன்று வடகிழக்கு திசையில் நகர்ந்து சௌராஷ்டிரா- கட்ச் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பாகிஸ்தான் கடற்கரை பகுதிகளில் மிகத்தீவிர புயலாக, மாண்டிவி (குஜராத்)-மற்றும்  கராச்சி  (பாகிஸ்தான்) இடையே,  ஜக்காவு துறைமுகம் (குஜராத்) அருகே கரையை கடக்கக்கூடும். அச்சமயத்தில் காற்றின் வேகம் மணிக்கு  125-135  கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 150  கிலோ மீட்டர் வேகத்திலும் இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  மேலும் படிக்க