தமிழ்நாடு:
- 17 மணி நேர சோதனைக்குப் பின் அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்த அமலாக்கத்துறை - பாஜக அரசின் பழிவாங்கும் நடவடிக்கை என எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு
- செந்தில் பாலாஜி நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதி - பைபாஸ் அறுவை சிகிச்சை மருத்துவர்கள் பரிந்துரை
- செந்தில் பாலாஜியை காண மருத்துவமனைக்கு வருகை தந்த முதலமைச்சர், அமைச்சர்கள், எம்.பி.க்கள் - கைது நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம்
- அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜிக்கு ஜூன் 28 ஆம் தேதி நீதிமன்ற காவல் - ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று நடைபெறுகிறது
- தன்னை காப்பாற்றிக் கொள்ளவே முதலமைச்சரும், அமைச்சர்களும் முயல்கிறார்கள் - செந்தில் பாலாஜி விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
- ஜெயலலிதா பற்றி நான் ஒருபோதும் தரக்குறைவாக பேசியது இல்லை - தன் மீதான குற்றச்சாட்டுக்கு பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை விளக்கம்
- இனி மாநில அரசின் அனுமதி கட்டாயம் - சிபிஐ-க்கு அளிக்கப்பட்டிருந்த சிறப்பு அனுமதியை திரும்ப பெற்றது தமிழ்நாடு அரசு
- பெண்களை ஏமாற்றி ஆபாச வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்த வழக்கு - நாகர்கோவில் காசிக்கு ஆயுள் தண்டனை விதிப்பு
- செந்தில் பாலாஜிக்கு நெஞ்சுவலி ஏற்படும் அளவுக்கு மனிதநேயமற்ற முறையில் நடந்து கொள்வதா? - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்
- பால் கொள்முதல் விலையை உயர்த்த அரசு பரிசீலனை செய்யும் - அமைச்சர் மனோ தங்கராஜ் தகவல்
- கலை படிப்புகளை காட்டிலும் அறிவியல் சார்ந்த கல்வியே தற்போதைய தேவையாக உள்ளது - ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு
இந்தியா:
- குஜராத்தில் இன்று பிபர்ஜாய் புயல் கரையை கடக்கிறது - முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்
- பிபோர்ஜோய் புயல் காரணமாக குஜராத்தில் 50 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றம்
- 10 லட்சம் வாக்குச்சாவடிகளைச் சேர்ந்த பாஜக தொண்டர்களிடத்தில் ஜூன் 27 ஆம் தேதி பிரதமர் மோடி உரை
- சுட்டெரிக்கும் கோடை வெயில் காரணமாக சத்தீஸ்கரில் பள்ளிகளுக்கான கோடை விடுமுறை நீட்டிப்பு
- காஷ்மீரில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக மக்கள் பீதி
- தெலங்கானா மாநிலத்தில் ஆளும் கட்சி எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் வீடுகளில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை
உலகம்:
- திருமணத்துக்காக இந்தியா வரவிருந்த தெலங்கானாவைச் சேர்ந்த இளம்பெண் இங்கிலாந்தில் கொலை
- அமெரிக்க அரசின் ரகசிய ஆவணங்களை எடுத்து சென்ற வழக்கில் முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிப்பு
- போப் ஆண்டவர் குணமடைந்து வருவதாகவும், விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் எனவும் வாடிகன் தகவல்
- ஆப்பிரிக்காவில் லாரி மீது பஸ்கள் மோதிய விபத்தில் 15 பேர் பலி
- இத்தாலிக்கு அகதிகளை ஏற்றிச் சென்ற மீன்பிடி கப்பல் கடலில் கவிழ்ந்து 79 பேர் பலி
விளையாட்டு:
- உலகக் கோப்பை ஸ்குவாஷ் போட்டியில் இந்திய அணி அரைஇறுதிக்கு தகுதி - ரசிகர்கள் மகிழ்ச்சி
- இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்திய அணியின் ஸ்ரீகாந்த், லக்ஷயா சென் 2-வது சுற்றுக்கு முன்னேற்றம்
- மாநிலங்களுக்கு இடையிலான 62வது தேசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி - புவனேஷ்வரில் இன்று தொடக்கம்
- டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை வெளியீடு - பந்து வீச்சாளர் பட்டியலில் அஸ்வின் தொடர்ந்து முதலிடம்
- டிஎன்பிஎல் தொடரில் மதுரை அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி நெல்லை அணி அபார வெற்றி