Morning Headlines August 11:


நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி


மணிப்பூர் விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு மிகக் கடுமையான தண்டனை கிடைக்க மத்திய, மாநில அரசுகள் அனைத்து விதமான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மணிப்பூர் விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதத்தில் இன்று கலந்துகொண்டு பதில் அளித்த பிரதமர் மோடி, "அரசின் மீது மக்கள் நம்பிக்கை வைத்திருப்பது மீண்டும் மீண்டும் நிரூபணமாகியுள்ளது. எனவே, நாட்டின் கோடிக்கணக்கான மக்களுக்கு எனது நன்றியை தெரிவிக்க நான் இங்கு வந்துள்ளேன்" என்றார்.


கடவுள் மிகவும் அன்பானவராக இருக்கிறார். சிலர் மூலம் பேசுகிறார். எதிர்க்கட்சிகள், இந்த தீர்மானத்தை கொண்டு வந்தது கடவுள் எனக்கு அளித்த ஆசீர்வாதம் என நினைக்கிறேன். 2018 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் எங்களுக்கான பரீட்சை அல்ல. அவர்களுக்கான நம்பிக்கையில்லா தீர்மானம். அதன் விளைவாக அவர்கள் தேர்தலில் தோற்றுப் போனார்கள் என்றும் கூறியிருந்தேன்.மேலும் வாசிக்க..


நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதத்தின் போது மணிப்பூர் தொடர்பாக பிரதமர் மோடி உரிய விளக்கம் அளிக்கவில்லை என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. சுமார் 133 நிமிடங்கள் வரை நீடித்த பிரதமர் மோடியின் உரையானது, ஏதோ ஒரு பொதுக்கூட்டத்தில் பேசியது போன்று தான் இருந்தது என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றனர். மணிப்பூர் தொடர்பாக அவர் பேசுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், எதிர்க்கட்சிகள் மீது குற்றச்சாட்டுகளை முன்வைக்கவும் பாஜகவின் பெருமைகளை மட்டுமே அவர் தனது 2 மணிநேர உரையில் பேசினார். நம்பிக்கையில்லா தீர்மானமே மணிப்பூர் விவகாரம் தொடர்பாக பிரதமர் பேச வேண்டும் என்பதற்காக தான் கொண்டு வரப்பட்டது. ஆனால், அதுதொடர்பாக பேச பிரதமர் மோடி வெறும் 10 நிமிடங்கள் தான் எடுத்துக்கொண்டார் எனவும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.மேலும் வாசிக்க..


பழங்குடி மக்களுக்கு மத்திய அமைச்சர் அமித் ஷா அளித்த உத்தரவாதம்


அமித் ஷாவுடனான சந்திப்பில் கலந்து கொண்ட பழங்குடி தலைவர்கள் மன்றத்தின் (ITLF) பொதுச் செயலாளர் மான் தாம்பிங், இதுகுறித்து விவரிக்கையில், "மலைப்பகுதிகளில் பாதுகாப்பு படைகள் இல்லாமல் மாநில கமாண்டோக்கள் சோதனை நடத்த மாட்டார்கள்.  அதேபோல, மலைப்பகுதிக்கு செல்லும் சோதனைச்சாவடிகளில் அசாம் ரைபிள்ஸ் படை வீரர்கள் காவலுக்கு நிற்பார்கள் என அமித் ஷா உறுதி அளித்துள்ளார்" என்றார்.மேலும் வாசிக்க..


கேள்விக்குறியாகும் தேர்தல் ஜனநாயகம்? மீண்டும் நீதித்துறையை சீண்டும் மத்திய அரசு


தலைமை தேர்தல் ஆணையர், தேர்தல் ஆணையர்கள் நியமன மசோதா, 2023, இன்று மாநிலங்களவையில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. அதன்படி, "பிரதமர், எதிர்கட்சி தலைவர் (அல்லது தனிப்பெரும் எதிர்க்கட்சியின் தலைவர்), பிரதமரால் நியமிக்கப்படும் மத்திய அமைச்சர் ஆகிய மூன்று பேர் கொண்ட கமிட்டி வழங்கும் பரிந்துரையின் பேரில் தேர்தல் ஆணையர்களை குடியரசு தலைவர்  நியமிப்பார். இந்த கமிட்டிக்கு பிரதமர் தலைமை தாங்குவார்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் வாசிக்க..


ரெப்போ வட்டி விகிதம்:


 ரெப்போ வட்டி விகிதம், இம்முறை மாற்றமின்றி 6.5% ஆக தொடரும் என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.  நமது பொருளாதாரம் சீராக தொடர்ந்து வளர்ந்து, உலகின் 5வது பெரிய பொருளாதாரமாக மாறியுள்ளது. இது உலக வளர்ச்சிக்கு 15% பங்களிக்கிறது" என குறிப்பிட்டுள்ளார். மேலும், 2023ஆம் ஆண்டில் ரியல் ஜிடிபி வளர்ச்சி 7 சதவீதமாக இருக்கும் என்றும், பணவீக்கத்தை குறைக்க தொடர்ந்த நாணய கொள்கை கூட்டம் வாயிலாக வலியுறுத்தப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.மேலும் வாசிக்க..


போராட்டத்திற்கு சென்றால் சம்பளம் குறைக்கப்படும்


பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்தக்கோரி மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர் சங்கங்கள் டெல்லியில் இன்று பேரணி நடத்த உள்ளனர்.பணியாளர் மற்றும் பயிற்சித் துறை  வெளியிட்டுள்ள உத்தரவில், "அரசு ஊழியர்கள் போராட்டம் உட்பட எந்த வடிவிலான வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டாலும், அதன் விளைவுகளைச் சந்திக்க நேரிடும். இது ஊதியக் குறைப்பு தவிர, தகுந்த ஒழுங்கு நடவடிக்கையும் அடங்கும்" என குறிப்பிடப்பட்டுள்ளது.மேலும் வாசிக்க..