Morning Headlines  August 09 : 


வாரத்திற்கு இனி 5 நாள் மட்டும்தான் வங்கி செயல்படுமா..?


இனி வாரத்திற்கு 5 நாட்கள் மட்டுமே வங்கிகள் செயல்படும் என்ற அறிவிப்பு விரைவில் வரலாம் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.கடந்த 2015ஆம் ஆண்டு முதல் நாடு முழுவதும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மாதத்தில் இரண்டாவது சனிக்கிழமை மற்றும் நான்காவது சனிக்கிழமை விடுமுறை என அறிவிக்கப்பட்டது.  இதனை அடுத்து, மாதத்தின் அனைத்து சனிக்கிழமைகளிலும் விடுமுறை அளிக்க  வேண்டும் என்றது ஊழியர்களின் தொடர் கோரிக்கையாக இருந்தது. கோரிக்கை குறித்து மத்திய அரசும் பரிசீலனையும் செய்து வருகிறது.மேலும் வாசிக்க..


3 மாதங்களுக்கு மேலாக நீடிக்கும் வன்முறை


மணிப்பூரில் கடந்த 3 மாதங்களுக்கு மேலாக வன்முறை நடைபெற்று வரும் நிலையில் நாகா பழங்குடியின மக்கள் இன்று பேரணி நடத்த இருக்கின்றனர். இந்த பேரணி ஆகஸ்ட் 9 ஆம் தேதி காலை 10:00 மணி முதல் மணிப்பூரின் நாகா பகுதிகளில் தமெங்லாங் தலைமையகம், சாண்டல் தலைமையகம், உக்ருல் தலைமையகம் மற்றும் சேனாபதி தலைமையகம் ஆகிய இடங்களில் நடைபெற இருக்கிறது. வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் பழங்குடியின அந்தஸ்து விவகாரத்தில் மெய்தி மற்றும் குகி இன மக்களுக்கு இடையே கடந்த மே மாதம் மிகப்பெரிய இனக்கலவரம் வெடித்தது. கிட்டத்தட்ட 3 மாதங்களுக்கு மேலாகியும் அந்த கலவரம் முடிவுக்கு வரவில்லை. இதுகுறித்து நாடாளுமன்றத்திலும் எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்து வருகின்றனர். மேலும் வாசிக்க..


நிலவை நெருங்கும் சந்திரயான் 3.. 


சந்திரயான் 3 விண்கலம் கடந்த 14 ஆம் தேதி ஆந்திரா மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து  விண்ணில் செலுத்தப்பட்டது. அடுத்ததாக, 40 நாட்கள் பயணம் செய்து  ஆகஸ்ட் 23-ஆம் தேதி மாலை 5.47 மணியளவில் நிலவில் தரையிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விண்ணில் செலுத்தப்பட்ட பின் இரண்டாம் கட்டமாக, விண்கலம் புவியின் தரைப்பரப்பில் இருந்து 170 கிலோ மீட்டர் தூரத்திற்கு சென்றதும், அதற்கு ஒரு உந்துதல் வழங்கப்பட்டு புவியின் நீளவட்டப்பாதையில் சுற்ற வைக்கப்பட்டது.15 நாட்கள் ஒவ்வொரு 170 கிலோ மீட்டருக்கு உந்துதல் வழங்கப்படும். இதனை ஆர்பிட் ரைசிங் என அழைக்கப்படும். அதனை தொடர்ந்து, டிரான்ஸ் லூனார் ஆர்பிட் எனப்படும் நிலவு பாதையில் ஆகஸ்ட் 1 ஆம் தேதி நுழைந்தது.மேலும் வாசிக்க..


பிரதமர் மோடியின் கோட்டையை குறிவைக்கும் பாரத் ஜோடோ யாத்திரை 2.0..


காங்கிரஸ் கட்சியை மக்களிடம் மீண்டும் கொண்டு சேர்க்கும் வகையில் அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, இந்திய ஒற்றுமை நடைபயணத்தை தலைமை தாங்கி நடத்தினார். இதில், பலத்தரப்பட்ட மக்களிடம் உரையாடி அவர்களின் குறைகளை கேட்டறிந்தார் ராகுல் காந்தி.இதை தொடர்ந்து, காங்கிரஸ், இது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது. காங்கிரஸ் கட்சியின் தகவல் தொடர்பு பிரிவு பொது செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், இதுகுறித்து அறிவிப்பு வெளியிட்டிருந்தார். ஆனால், நடைபயணம் எப்போது தொடங்கப்படும், எங்கிருந்து தொடங்கப்படும் தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படாமல் இருந்தது.மேலும் வாசிக்க..


ஒட்டு மொத்த இந்தியாவும் என்னோட வீடுதான்


ஒட்டு மொத்த இந்தியாவும் தனக்கு வீடுதான் என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் எம்.பியுமான ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.  கடந்த 2019ஆம் ஆண்டு, கர்நாடகாவில் நடந்த தேர்தல் பிரசாரத்தின்போது பிரதமர் மோடி, லலித் மோடி, நீரவ் மோடி ஆகியோரை மறைமுகமாக விமர்சித்து பேசிய ராகுல் காந்தி, "எப்படி, திருடர்கள் அனைவருக்கும் மோடி என பெயர் சூட்டுகிறார்கள்?" என கேள்வி எழுப்பியிருந்தார். ராகுல் காந்தியின் இந்த பேச்சு, அவதூறு கிளப்பும் வகையில் இருப்பதாக குஜராத் மாநிலத்தை சேர்ந்த பாஜக நிர்வாகி புர்னேஷ் மோடி வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த சூரத் நீதிமன்றம், ராகுல் காந்திக்கு அதிகபட்ச தண்டனையான 2 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி உத்தரவிட்டது.மேலும் வாசிக்க..


பிரதமர் மோடி மௌனமாக இருப்பதற்கு மூன்று காரணங்கள் 


மணிப்பூர் விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வரும் நிலையில், இது தொடர்பாக பிரதமர் மோடியை பதில் அளிக்க வைப்பதற்காக காங்கிரஸ் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்துள்ளது. அதன் மீதான விவாதம் இன்று தொடங்கியுள்ளது. அவதூறு வழக்கில் 2 ஆண்டுகள் தண்டனையை உச்ச நீதிமன்றம் நிறுத்த வைத்ததால், இன்று நடைபெறும் நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாத்தை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தொடங்கி வைப்பார் என தகவல் வெளியானது.ஆனால், கடைசி நிமிடத்தில் காங்கிரஸ் மக்களவைக் குழு துணை தலைவர் கவுரவ் கோகோய் விவாதத்தை தொடங்கி வைத்து பேசினார். அப்போது, பிரதமர் மோடியை கடுமையாக தாக்கி பேசிய அவர், "மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் மௌன விரதத்தை முடிவுக்கு கொண்டு வரவே அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வர வேண்டிய கட்டாயம் எதிர்க்கட்சி கூட்டணியான இந்தியாவுக்கு ஏற்பட்டது.மேலும் வாசிக்க..


மணிப்பூர் தொடர்பாக பேசிய டெரக் ஓ பிரையன்


மணிப்பூர் விவகாரம் தேசத்தின் மனசாட்சியை உலுக்கிய நிலையில், நாடாளுமன்றத்தில் இது தொடர்பாக விரிவான விவாதம் நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி கோரிக்கை விடுத்து வருகிறது. ஆனால், இன்று வரையில் விரிவான விவாதத்திற்கு மத்திய அரசு சம்மதிக்கவில்லை. இந்த சூழலில், மாநிலங்களவையின் இன்றைய கூட்டத்தில், விதி எண் 267 இன் கீழ் மணிப்பூர் தொடர்பாக விவாதிக்க இந்தியா கூட்டணியை சேர்ந்த எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நோட்டீஸ் வழங்கினர்.  இதற்கிடையே, நாடாளுமன்ற விதிகள் மீறப்பட்டது தொடர்பாக பேச அனுமதிக்குமாறு திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. டெரக் ஓ பிரையன், மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கரிடம் கோரிக்கை விடுத்தார். அப்போது, எந்த விதியின்படி பேச விரும்புகிறீர்கள் என ஜெகதீப் தன்கர் கேள்வி எழுப்பினார். மேலும் வாசிக்க..