தமிழ்நாடு:
தமிழ்நாட்டில் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு - அமைச்சர் மா.சுப்ரமணியன்
- தமிழ்நாட்டில் இன்று இரவு முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இரவு 10 மணியிலிருந்து காலை 5 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும்.
- கொரோனா பரவல் காரணமாக வெள்ளி, சனி, ஞாயிறுக்கிழமைகளில் அனைத்து வழிபாட்டுத்தலங்களிலும் பொதுமக்களுக்கு அனுமதியில்லை - தமிழ்நாடுஅரசு
- நீட் போன்ற நுழைவுத் தேர்வுகள் தேவையற்றவை - ஆளுநர் ஆர்.என்.ரவி
- ஆவினில் வேலை வாங்கி கொடுப்பதாக ரூ.3 கோடி மோசடி செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த ராஜேந்திர பாலாஜி கர்நாடகாவில் கைது
- அரசு, தனியார் மருத்துவ மற்றும் துணை மருத்துவக்கல்லூரிகள் தவிர மற்ற அனைத்து கல்லூரிகளுக்கும் ஜனவரி 20-ஆம் தேதி வரை விடுமுறை
இந்தியா:
- புல்லி பாய் செயலியில் பெண்களை ஏலம் விட்டதற்காக 18 வயது இளம்பெண் மற்றும் 21 வயது மாணவரை போலீசார் இன்று கைது செய்தனர்.
- பாதுகாப்பு குறைபாடு காரணமாக பஞ்சாப்பில் பிரதமர் மோடி பிரச்சாரம் ரத்து
- தமிழ்நாடு ஆளுநர் பதவி விலக வேண்டும் - டி.ஆர். பாலு
- பாரத் பயோடெக்கின் மூக்குவழி பூஸ்டர் இறுதி கட்ட சோதனைக்கு அனுமதி
- மூன்று நாட்களில் 15 -18 வயதுக்குட்பட்ட 1 கோடி சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தி இந்தியா சாதனை.
உலகம்:
- தடுப்பூசி செலுத்தாதவர்களை சிறுநீர் கழிப்பது போல் உதாசீனப்படுத்துவேன் என்று பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் பேசியது சர்ச்சையானது.
- அமெரிக்காவைச் சேர்ந்த டொனால்ட் என்ற நபர் வேட்டைக்காக நான் வைத்த கேமராவில் ஏலியன் உருவம் ஒன்று பதிவாகி இருப்பதாக தெரிவித்துள்ளார்.
- பிரிட்டனில் கொரோனா பாதிக்கப்பட்ட செவிலியர் ஒருவர் 28 நாட்கள் கோமாவில் இருந்ததற்கு பிறகு, மருத்துவர்கள் கொடுத்த ‘வயாகரா’ மருந்தால் உயிர் பிழைத்த அதிசய சம்பவம் நடைபெற்றிருக்கிறது.
விளையாட்டு:
- இரண்டாவது டெஸ்டில் தென்னாப்பிரிக்கா அணிக்கு 240 ரன்கள் இலக்கு நிர்ணயித்த நிலையில், அந்த அணி வெற்றி பெற இன்னும் 122 ரன்கள் தேவைப்படுகிறது. தென்னாப்பிரிக்கா ரன் விவரம்: 118/2
- கடந்த 10 ஆண்டுகளில், நியூசிலாந்து மண்ணில் நியூசி அணியை வீழ்த்தி இருக்கும் முதல் ஆசிய அணி என்ற சாதனையைப் படைத்திருக்கிறது வங்கதேச அணி.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
பிக்பாஸ் அஷராவுக்கு ரூ.1 கோடி ரூபாயில் அடித்த பம்பர் பரிசு.. சோஷியல் மீடியாவில் வைரல்..
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்