தமிழ்நாடு:



  • கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் மாதம் ரூ.1000 பெற 1 கோடி பெண்கள் தேர்வு - முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு

  • அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு - வெள்ளிக்கிழமைக்குள் அமலாக்கத்துறை பதிலளிக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு

  • காவல்துறையின் கட்டுப்பாடுகளை மீறி சென்னையில் சாலை மறியலில் ஈடுபட்ட அண்ணாமலை உள்ளிட்ட பாஜகவினர் - 800 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

  • தமிழ்நாட்டில் டெங்கு பாதிப்பை கட்டுக்குள்  கொண்டு வருவது குறித்து  தலைமை செயலாளர் இன்று ஆலோசனை - சுகாதாரம், பொதுப்பணித்துறை  உயரதிகாரிகள் பங்கேற்பு

  • தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் - காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ். அழகிரி வலியுறுத்தல்

  • தனியார் வாகனங்களில் அரசு சின்னங்களை அகற்ற எடுத்த நடவடிக்கை என்ன? - தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி

  • உதகையில் 2 புலிகள் இறந்த விவகாரம் - மாட்டை கொன்றதற்காக புலிகளுக்கு விஷம் வைத்த நபர் கைது


இந்தியா:



  • ஜி20 மாநாடு முடிந்துவிட்டதால் உள்நாட்டு பிரச்னைகளில் மோடி அரசு கவனம் செலுத்த வேண்டும் - காங்கிரஸ் தலைவர் கார்கே வலியுறுத்தல்

  • 5 மாநில சட்டமன்ற தேர்தல் தொடர்பான அறிவிப்பு அடுத்த மாதம் வெளியாக வாய்ப்பு - முன்னேற்பாடுகளில் தேர்தல் ஆணையம் தீவிரம்

  • இன்று நடைபெறுகிறது I.N.D.I.A. கூட்டணியின் பரப்புரைக் குழுவின் இரண்டாவது கூட்டம் - சென்னை, பாட்னா, நாக்பூர்  மற்றும் டெல்லியில் பொதுக்கூட்டங்கள் நடத்துவது குறித்து ஆலோசனை 

  • ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் ஜாமின் மனு இன்று விசாரணை - உயிருக்கு ஆபத்து இருப்பதாக நீதிமன்றத்தில் முறையீடு

  • சந்திரபாபு நாயுடு கைதை கண்டித்து ஆந்திர மாநிலத்தில் நடந்த முழு அடைப்பு போராட்டம் - தெலுங்கு தேசம் தலவர்கள் முன்னெச்சரிக்கையாக கைது

  • லடாக்கில் ஒரு அங்குல நிலத்தை கூட சீனா அபகரிக்கவில்லை - துணை நிலை ஆளுநர் திட்டவட்டம் 

  • பங்குச்சந்தை வரலாற்றில் முதன்முறையாக  20 ஆயிரம் புள்ளிகளை தொட்ட நிஃப்டி 


மேலும் படிக்க: Virat Kohli 47th Century: அபாரம்.. அதிவேக 13 ஆயிரம்.. 47வது சதம்..! புதிய வரலாறு படைத்த ரன்மெஷின் கோலி..!


உலகம்:



  • மொராக்கோ நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3 ஆயிரத்தை கடந்துள்ளது - 2700-க்கும் அதிகமானோர் காயம்

  • இந்தோ பசிபிக் பிராந்தியத்தில் அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்போர் பயிற்சி - சீனா கடும் எதிர்ப்பு

  • பிரேசில் புயலில் வீடுகள் இடிந்து 44 பேர் பலி - பாதிக்கப்பட்ட இடங்களில் துணை அதிபர் ஆய்வு

  • வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் - ரஷ்ய அதிபர் புதின் விரைவில் சந்திக்க உள்ளதாக தகவல் - அமெரிக்க உள்ளிட்ட நாடுகள் கவலை


விளையாட்டு:



  • ஆசியக்கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா - 228 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி

  • ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிவேகமாக 13 ஆயிரம் ரன்களை கடந்து இந்திய வீரர் கோலி சாதனை

  • சுப்பர் சுற்றில் இந்தியா - இலங்கை இன்று மோதல் - இறுதிப்போட்டிக்கு தகுதி பெற இந்தியா தீவிரம்

  • உலகக்கோப்பைக்கான அணியில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பளித்தது மகிழ்ச்சி - தமிழர்கள் இல்லாதது வருத்தமளிக்கிறது என நடராஜன் பேச்சு