Tirumala Tirupati : தெலங்கு வருட பிறப்பை முன்னிட்டு மார்ச் 21 மற்றும் 22ஆம் தேதிகளில் வி.ஐ.பி. தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
உலக பிரசித்தி பெற்ற திருமலை திருப்பதிக்கு தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து வருகின்றனர். பாதயாத்திரை, இலவச தரிசனம், ரூ.300 கட்டணம், விஐபி என பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
வி.ஐ.பி. தரிசனம் ரத்து:
இந்நிலையில் இங்கு, ஆண்டுதோறும் தெலுங்கு வருட பிறப்பை முன்னிட்டு பூஜைகள் வெகு விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டு தெலுங்கு வருட பிறப்பு மார்ச் 22ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு வரும் 21ஆம் தேதி கோயிலில் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெறுகிறது. இதனால் கோயில் வளாகம் முழுவதும் தூய்மைப்படுத்தும் பணி நடைபெற உள்ளதால் காலை 6 மணி முதல் 11 மணி வரை தரிசனம் ரத்து செய்யப்படுகிறது.
ஆழ்வார் திருமஞ்சனம் மற்றும் யுகாதி பண்டிகையையொட்டி வரும் 21 மற்றும் 22ஆம் தேதி விஐபி தரிசனம் ரத்து செய்யப்படுவதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. தெலுங்கு வருட பிறப்பு அன்று அதிகாலை 3 மணிக்கு ஏழுமலையானுக்கு சுப்ரபாதம் நடைபெறும். காலை 6 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவியுடன் ஏழுமலையானுக்கு சிறப்பு பூஜை நடைபெறும்.
யுகாதி சிறப்பு பண்டிகை:
காலை 7 மணி முதல் 9 மணி வரை கொடிமரத்தை சுற்றி சாமி வீதி உலா நடைபெறுகிறது. மேலும் யுகாதியை முன்னிட்டு பூஜை நடைபெறும் அன்று கோயில் முழுவதும் வண்ண மிண்விளங்குகுள் மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்து கொண்டு வரப்படும் வண்ண மலர்கள் கொண்டு பெருமாளுக்கு அலகார செய்யப்படும்.
மேலும், கல்யாண உத்சவம், ஊஞ்சல் சேவை, அர்ஜித பிரம்மோத்சவம், சஹசர தீபாளங்கர சேவை உள்ளிட்ட ஸ்ரீவாரி அர்ஜித சேவையும் இம்மாதம் முழுவதும் நடைபெறும். https://tirupatibalaji.ap.gov.in/#/login என்ற இணையதளம் மூலம் பக்தர்கள் தங்களுக்கான டிக்கெட்களை முன்பதிவு செய்து கொள்ளலாம் என்ற நடைமுறை இருந்து வருகிறது.
இந்நிலையில், யுகாதி மற்றும் ஆழ்வார் திருமஞ்சனத்தையொட்டி மார்ச் 21,22 ஆகிய தேதிகளில் விஐபி தரிசனம் ரத்து செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க