தமிழ்நாடு: 



  • மேற்கு மண்டலத்தில் ஜவுளி பூங்கா அமைக்கப்படும் - கோவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு 

  • அதிமுகவை முடக்குவதை விட்டு விட்டு மக்களுக்கு நன்மை செய்வதில் கவனம் செலுத்துமாறு முதலமைச்சருக்கு அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல் 

  • என்.எல்.சி.க்கு எதிரான போராட்டத்தில் 50% கடைகள் அடைப்பு - பல்வேறு பகுதிகளில் மறியலில் ஈடுபட முயன்ற பாமகவினர் கைது 

  • கூட்டமாக இடங்களுக்கு செல்ல வேண்டாம் என மருத்துவர்கள் அறிவுறுத்தியதால் அரசியலுக்கு வரவில்லை - நடிகர் ரஜினிகாந்த் விளக்கம் 

  • தமிழ்நாட்டில் காய்ச்சல் தடுப்பு முகாம்கள் தொடர்ந்து நடத்தப்படும் - தமிழ்நாடு அரசின் சுகாதாரத்துறை தகவல்

  • திருவாரூர் அருகே ரவுடி கொலை வழக்கில் குற்றவாளியை பிடிக்கச் சென்ற போலீசார் மீது கொடுவாளால் தாக்குதல் - குற்றவாளியை சுட்டுப்பிடித்தனர்

  • திருவாரூர் அருகே நீடாமங்கலத்தில் கொலை செய்யப்பட்ட ரவுடியின் உடலை எடுத்துச் செல்லும்போது கலவரம் - காவல்துறையினர் தடியடி 

  • மும்முனை மின்சார விநியோகம் 12 மணி நேரமாக குறைப்பு - தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகள் குற்றச்சாட்டு 

  • பால் உற்பத்தியாளர்கள் சங்கத்துடன் ஆவின் நிர்வாகத்தினர் நடத்திய பேச்சுவார்த்தையில் சுமூக தீர்வு - மதுரையில் நடைபெற்ற போராட்டம் வாபஸ் 

  • சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ உடற்கல்வியியல் கல்லூரி முதல்வர் பாலியல் புகாரில் கைது 

  • ஆஸ்கர் விருது விழாவில் அரங்கேறும் நாட்டு நாட்டு பாடல் - ஆர்.ஆர்.ஆர். படக்குழுவுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் வாழ்த்து 


இந்தியா:



  • குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுடன் பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பு - அண்மை கால அரசியல் நிகழ்வுகள், திட்டங்கள் குறித்து ஆலோசனை நடத்தியதாக தகவல் 

  • டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் மகள் கவிதாவிடம் அமலாக்கத்துறை 9 மணி நேரம் விசாரணை 

  • மத்தியப்பிரதேசத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவரின் வீடு ஜேசிபி இயந்திரம் மூலம் இடிப்பு - பெண் காவலர்கள் நடவடிக்கை 

  • புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த ராஜஸ்தானின் 5 ராணுவ வீரர்கள் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தல் - ஜெய்ப்பூரில் பாஜகவினர் போராட்டத்தால் பதற்றம் 

  • நாடு முழுவதும் அதிகரிக்கும் வைரஸ் காய்ச்சல் - பாதிப்பை தடுக்க மருந்துகளை கையிருப்பில் வைத்துக் கொள்ளுமாறு மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தல்

  • ரயில்வே வேலைக்கு நிலத்தை லஞ்சமாக பெற்ற விவகாரம் - லாலு பிரசாத் வீட்டில் நடந்த சோதனையில் ரூ.600 கோடி மோசடி கண்டுபிடிப்பு 

  • ஹோலி கொண்டாட்டத்தில் ஜப்பான் பெண் சுற்றுலா பயணியிடம் அத்துமீறல் - டெல்லியில் 3 பேர் கைது 


உலகம்:



  • 95வது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரம் - இந்திய படங்களுக்கு விருது கிடைக்குமா என ரசிகர்கள் எதிர்பார்ப்பு 

  • இந்தோனேஷியாவில் வெடித்து சிதறிய மெராபி எரிமலை - பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றம் 

  • வடகொரியாவில் கட்டுமான பணியின்போது 110 வெடிகுண்டுகள் கண்டெடுப்பு -  கொரிய போரின் முடிவில் அமெரிக்க படைகளால் விட்டு செல்லப்பட்டதாக கண்டுபிடிப்பு 

  • சீனா தலைநகர் பீஜிங்கில் வாகனங்கள் மீது புழுக்கள் மழை பொழிந்ததாக வீடியோ வைரல் - பொதுமக்கள் அச்சம் 


விளையாட்டு:



  • ஆஸி., அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் : 3வது நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 289 ரன்கள் குவிப்பு; சுப்மன் கில் சதம் - விராட் கோலி அரைசதம்