கர்நாடகாவில் இஸ்லாமியர்கள் இட ஒதுக்கீட்டை ரத்து செய்த விவகாரத்தில் மத்திய அமைச்சர் அமித்ஷாவுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. இஸ்லாமியர் இட ஒதுக்கீடு தொடர்பான வழக்கு நிலுவையில் இருக்கும்போது பொது வெளியில் எப்படி பேசலாம் என உச்சநீதிமன்ற நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.


தெலங்கானாவில் கே. சந்திரசேகர்ராவ் தலைமையிலான பாரத ராஷ்ட்ர சமிதி கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. இவர் மத்திய அரசுடன் மோதல் போக்கை கடைபிடித்து வருகிறார். சமீபத்தில் தெலங்கானாவிற்கு சென்ற பிரதமர் மோடியை வரவேற்பதற்கும், அவர் பங்கேற்ற நிகழ்ச்சிகளிலும் சந்திரசேகர்ராவ் பங்கேற்காதது பெரும் சர்ச்சையாக மாறியது.


இந்த நிலையில், சமீபத்தில் ஹைதரபாத் அருகே உள்ள செவல்லாவில் நடைபெற்ற விஜயசங்கல்ப சபா நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் அமித்ஷா பங்கேற்றார். அப்போது, அந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது, “ நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தெலங்கானாவில் அரசியலமைப்புக்கு புறம்பாக உள்ள இஸ்லாமியர்கள் இட ஒதுக்கீட்டை முடிவுக்கு கொண்டு வருவோம். அந்த இட ஒதுக்கீட்டை பட்டியலின, பழங்குடியின மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு வழங்குவோம்” என கூறியுள்ளார்.


இது ஒரு புறம் இருக்கு  கர்நாடகாவில் பசவராஜ் பொம்மை தலைமையில் நடைபெற்று வரும் பா.ஜ.க. ஆட்சி அந்த மாநிலத்தில் இஸ்லாமியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த இட ஒதுக்கீட்டை ரத்து செய்தது. அந்த இட ஒதுக்கீட்டை அந்த மாநிலத்தில் உள்ள ஒக்கலிகா, லிங்காயத்து உள்ளிட்ட சமுதாயத்தினருக்கு வழங்கியுள்ளனர். இதனால், கர்நாடகாவில் பெரும் கலவரமே அரங்கேறியது என்பது குறிப்பிடத்தக்கது. 


இப்படி இருக்கும் சூழலில் அமித்ஷா இஸ்லாமியர்களுக்கு வழங்கப்படும் இட ஒதுக்கீடு தொடர்பாக பேசியது பெரும் விவாத பொருளாக மாறியுள்ளது. இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இன்று அந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு கண்டன, தெரிவித்துள்ளது. இஸ்லாமியர்கள் இடஒதுக்கீடு தொடர்பான வழக்கு நிலுவையில் இருக்கும்போது பொது வெளியில் எப்படி பேசலாம் என நீதிபதி கேள்வி எழுப்பினார். மேலும் வழக்கு நிலுவையில் இருக்கும் போது பொது வெளியில் அமித்ஷா பேசியது தவறு என குறிப்பிட்டனர். மக்கள் பிரதிநிதிகள் பொது வெளியில் பேசும்போது கவனத்துடன் பேச வேண்டும் என நீதிபதி அறிவுரை வழங்கினார். அதேபோல் இடஒதுக்கீட்டை அரசியலாக்க அனுமதிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.


Adipurush Trailer: பாகுபலி பிரபாஸின் முதுகில் குத்திய ரசிகர்கள்.. ஆன்லைனில் கசிந்தது ஆதிபுருஷ் டிரெய்லர்


Truecaller For Whatsapp: ஸ்பேம் கால் பிரச்னை.. வாட்ஸ்-அப் செயலியிலும் வருகிறது ட்ரூ காலர் பயன்பாடு..