ஐபிஎல் தொடரின் 55வது போட்டியில் நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி கேபிடல்ஸ் அணியும் மோதியது. இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணியை வீழ்த்தி புள்ளி பட்டியலில் தொடர்ந்து இரண்டாவது இடத்தில் உள்ளது. 


சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் முதலில் பேட்டிங் தேர்வு செய்து சென்னை அணி களமிறங்கியது. 50 ரன்களுக்குள் தொடர்ந்து இரண்டு விக்கெட்கள் விழ, ஷிவம் துபே 12 பந்துகளில் 25 ரன்கள் குவித்து நம்பிக்கை அளித்தார். தொடர்ந்து ராயுடு 23 ரன்களும்., ஜடேஜா 23 ரன்களும், கேப்டன் தோனி 20 ரன்களும் எடுத்தனர். 


இதன்மூலம் சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் குவித்தது. டெல்லி அணி சார்பில் மிட்செல் மார்ச் 3 விக்கெட்களும், அக்ஸார் படேல் 2 விக்கெட்களும் எடுத்திருந்தனர். 


168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணிக்கு ஆரம்பமே 2 விக்கெட்கள் வீழ்ந்தது. தொடர்ந்து சென்னை அணி சிறப்பாக பந்துவீச டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 140 ரன்கள் மட்டும் எடுத்தது. குஜராத் டைட்டன்ஸ் அணி தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. சென்னை அணி 12 போட்டிகளில் 15 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது, இந்த சீசனில் 11 போட்டிகளில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு இது ஏழாவது தோல்வியாகும். 


ஐபிஎல் புள்ளி அட்டவணை நிலவரம்: 



  1. குஜராத் டைட்டன்ஸ் - 11 (போட்டிகள்), 8 (வெற்றி)

  2. சென்னை சூப்பர் கிங்ஸ் - 12 (போட்டிகள்), 7 (வெற்றி)

  3. மும்பை இந்தியன்ஸ் - 11 (போட்டிகள்), 6 (வெற்றி)

  4. லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - 11 (போட்டிகள்), 5 (வெற்றி)

  5. ராஜஸ்தான் ராயல்ஸ் - 11 (போட்டிகள்), 5 (வெற்றி)

  6. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - 11 (போட்டிகள்), 5 (வெற்றி)

  7. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - 11 (போட்டிகள்), 5 (வெற்றி)

  8. பஞ்சாப் கிங்ஸ்- 11 (போட்டிகள்), 5 (வெற்றி)

  9. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - 10 (போட்டிகள்), 4 (வெற்றி)

  10. டெல்லி கேப்பிடல்ஸ் - 11 (போட்டிகள்), 4 (வெற்றி)


ஆரஞ்சு கேப் : 


மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான தனது கடைசி போட்டியில் மற்றொரு அரைசதம் அடித்ததை தொடர்ந்து பெங்களூரு கேப்டன் ஃபாப் டு பிளெசிஸ் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. டு பிளெசிஸ் 11 போட்டிகளில் 576 ரன்களுடன் முதலிடத்திலும், ராஜஸ்தான் அணியின் ஜெய்ஸ்வால் 11 போட்டிகளில் 477 ரன்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். தொடர்ந்து, குஜராத் அணியின் சுப்மன் கில், சென்னை அணியின் டெவோன் கான்வே, பெங்களூரு அணியின் விராட் கோலி ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.



  • (ஆர்சிபி) ஃபாஃப் டு பிளெசிஸ் - 576 ரன்கள் (11 போட்டிகள்)

  • (ஆர்.ஆர்) யாஷஸ்வி ஜெய்ஸ்வால் - 477 ரன்கள் (11 போட்டிகள்)

  • (ஜிடி) ஷுப்மான் கில் - 469 ரன்கள் (11 போட்டிகள்)

  • (சிஎஸ்கே) டெவோன் கான்வே - 468 ரன்கள் (12 போட்டிகள்)

  • (ஆர்சிபி) விராட் கோலி - 420 ரன்கள் (11 போட்டிகள்)


பர்பிள் கேப்: 


குஜராத் டைட்டன்ஸ் அணியின் முகமது ஷமி மற்றும் ரஷித் கான் ஆகியோர் 19 விக்கெட்டுகளுடன் முதல் இரண்டு இடங்களில் உள்ளனர். சென்னை அணியின் துஷார் தேஷ்பாண்டே 12 போட்டிகளில் 19 விக்கெட்களுடன் மூன்றாம் இடத்தில் உள்ளார். மும்பை அணியின் பியூஷ் சாவ்லா, கேகேஆர் அணியின் வருண் சக்ரவர்த்தி,  யுஸ்வேந்திர சாஹல் ஆகியோர் தலா 17 விக்கெட்டுகளை வீழ்த்தி அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர். 



  • (ஜிடி) முகமது ஷமி - 19 விக்கெட்டுகள் (11 போட்டிகள்)

  • (ஜிடி) ரஷித் கான் - 19 விக்கெட்டுகள் (11 போட்டிகள்)

  • (சிஎஸ்கே) துஷார் தேஷ்பாண்டே - 19 விக்கெட்டுகள் (12 போட்டிகள்)

  • (எம்ஐ) பியூஷ் சாவ்லா - 17 விக்கெட்டுகள் (11 போட்டிகள்)

  • (கேகேஆர்) வருண் சக்கரவர்த்தி - 17 விக்கெட்டுகள் (11 போட்டிகள்)

  • (ஆர்சிபி) யுஸ்வேந்திர சாஹல் - 17 விக்கெட்டுகள் (11 போட்டிகள்)