வெள்ளரிக்காய் வெயில் காலத்தில் உகந்த உணவு. ஆனால் சில வெள்ளரிக்காயில் கசப்பேறியிருக்கும். கிராமங்களில் பாம்பு ஏறிய காய் கசக்கும் என்று பந்தல் காய்களைப் பற்றி சொல்வார்கள். 
ஆனால் உண்மையில் வெள்ளரிக்காய் ஏன் கசக்கிறது தெரியுமா?


வெள்ளரிக்காயின் கசப்புக்கு காரணம் என்ன?


வெள்ளரிக்காயின் கசப்புக்கு காரணம் அதிலிருக்கும் கியூக்கர்பிட்டாசின் என்னும் காம்பவுண்ட் தான்.  இயற்கையாக உள்ள இந்த கியூக்கர்பிட்டாசின், வெள்ளரிக்காயில் ஏற்படும் வேதியியல் மாற்றத்தினால் சுவையில் பல மாற்றங்களை கொண்டுவருகிறது. கியூக்கர்பிட்டாசின் அளவு அதிகமாக இருந்தால், சுவை கசப்பாக இருக்கும். பழம்/காய்கறி எவ்வாறு வளர்க்கப்படுகிறது என்பதைப் பொறுத்து கியூக்கர்பிட்டாசின் அளவு சார்ந்துள்ளது. நீர்ப்பாசனம் மற்றும் வெப்பநிலை இதில் முக்கிய பங்கு வகிக்கிறது. குறைந்த அளவு நீர் மற்றும் அதிக வெப்பநிலை கியூக்கர்பிட்டாசின் உற்பத்தியை அதிகரிக்கலாம். இது கசப்புக்கு வழிவகுக்கும்.


கசப்பான வெள்ளரிக்காய் சாப்பிடுவது பாதுகாப்பானதா?


எளிமையாகச் சொல் வேண்டும் என்றால், கெட்டுப்போனதற்கான அறிகுறி தென்படும் வரை, மிதமான கசப்பான வெள்ளரிக்காய் சாப்பிடுவதில் பிரச்சனை இல்லை. ஆனால் கியூக்கர்பிட்டாசின் அளவு அதிகமாக இருந்தால், அது சிலருக்கு அஜீரணம், வயிற்றில் அசௌகரியம் மற்றும் வீக்கத்தை ஏற்படுத்தலாம். எனவே, வெள்ளரியை உட்கொள்வதற்கு முன், முடிந்தவரை கசப்பை நீக்குவது எப்போதும் பரிந்துரைக்கப்படுகிறது . அதை எப்படி செய்வது என்று யோசிக்கிறீர்களா? .


1. விளிம்புகளை அகற்றி தேய்க்கவும்
 இது வெள்ளரிக்காயின் கசப்பை நீக்கும் மிகவும் பிரபலமான செயல்முறைகளில் ஒன்றாகும். விளிம்புகளை வெட்டி வெள்ளரிக்காய் மீது தேய்க்கவும். நல்ல அதிக அளவு வெள்ளை, நுரை போன்ற பொருட்கள் வெளியேறுவதை நீங்கள் காண்பீர்கள். அப்பகுதியை துண்டாக்கி அகற்றவும்.


2. தோலை அகற்றவும்
கியூக்கர்பிட்டாசின்  தோலில் தான் அதிகளவில் வளரும். அதனாக் வெள்ளரியை உங்களது உணவில் சேர்ப்பதற்கு முன் அதை தோலை அகற்றுவது பரிந்துரைக்கப்படுகிறது 


3. வினீகர் அல்லது எலுமிச்சை சாறு
வெள்ளரியை வெட்டி அதில் சிறிதளவு வினீகர் அல்லது எலுமிச்சை சாறினை கலந்து 10ம்நிமிடங்களுக்கு ஊர விடவும். வினீகர் அல்லது எலுமிச்சை சாறில் இருக்கும் அமிலமானது வெள்ளரிக்காயின் கசப்பை நீக்கும். 


வெள்ளரியில் மிகுந்துள்ள நீர்ச்சத்து, கடும் நாவறட்சியை விரட்டுவதோடு, பசியையும் உண்டாக்கும், உடலைக் குளிரவைக்கும். வெள்ளரியில் வைட்டமின்கள் ஏதுமில்லை. ஆனால் தாதுப்பொருட்களான சோடியம், கால்சியம், மக்னேசியம், இரும்பு, பாஸ்பரஸ், கந்தகம், சிலிகன், குளோரின் போன்றவை உண்டு. அதனால் வெள்ளரியை உட்கொள்வது உடலுக்கு மிகுந்த நன்மை தரும்.


4. உப்பு 
வினீகர் அல்லது எலுமிச்சை சாறு போலவே உப்பும் வெள்ளரிக்காயின் கசப்பை  குறைக்கும். சிறிதளவு உப்பு சேர்த்து அதை 30 நிமிடங்களுக்கு ஊர விடவும். பின் குளிர்ந்த நீரில் கழுவவும். அதனால் சுவையான மொறுமொறுப்பான  வெள்ளரிக்காய் கிடைக்கிறது. 


5. ஃபோர்க்கைக் கொண்டு வெள்ளரியை சுரண்டுங்கள் 
வெள்ளரியின் முனைகளை வெட்டி அதன் தோலை சுரண்டு உரிப்பதால் தோலில் உள்ள கியூக்கர்பிட்டாசின் நீக்கப்படுகிறது. அதனை இரு முறை செய்ய வேண்டும்.