புதுச்சேரியில் மின்துறை தனியார் மயமாக்குவதை தடுக்க வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
புதுச்சேரி பெய்து வரும் வடகிழக்கு பருவ மழையால் மக்கள் வெள்ளத்தில் தத்தளிக்கிறார்கள். விளை நிலங்கள் நீரில் மூழ்கியது. புதுவை வந்த மத்திய குழு முழுமையாக ஆய்வு செய்யவில்லை. தொடர்ந்து கனமழை பெய்வதால் அனைத்து குடும்பங்களுக்கும் ரூ.10 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும். முதலமைச்சர் ரங்கசாமி பல அறிவிப்புகளை வெளியிட்டார். அவை அறிவிப்புகளோடு நிற்கின்றன. மழைக்கால நிவாரணமாக ரூ.300 கோடி கேட்டு மத்திய அரசுக்கு ரங்கசாமி கடிதம் அனுப்பி உள்ளார். இதுவரை மத்திய அரசிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை.
விழுப்புரம் : பெண் தற்கொலை ; வரதட்சணை புகாரில், கணவர் குடும்பத்தினர் கைது
இதுவரை மத்திய அரசு மௌனமாகவே உள்ளது. அதிகாரிகள் 20 கோடி ரூபாய் மட்டுமே நிவாரணம் கோரியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. முதல்வர் ரங்கசாமி தலைமைச் செயலர் அஸ்வினி குமாரை மாற்றக்கோரி மத்திய அரசிடம் பேசியுள்ளார். கடிதமும் அனுப்பி உள்ளார். ஆனால் இதுவரை தலைமைச் செயலரை மத்திய அரசு மாற்றவில்லை. எங்களுக்கு தொல்லை தந்தது போல் தற்போது முதல்வர் ரங்கசாமிக்கு மத்திய அரசு தொல்லை தருகிறது.
எங்களது ஆட்சிக்கும், ரங்கசாமி ஆட்சிக்கும் எவ்வித வித்தியாசமும் இல்லை. எங்களுக்கு தொல்லை கொடுத்தார்களோ, அதேபோல் மத்திய அரசு ரங்கசாமிக்கும் தொல்லை கொடுக்கிறது. மத்திய அரசுடன் இணக்கமாக இருந்து முதலமைச்சர் என்ன சாதித்தார். இதனை அவர் புரிந்து கொள்ள வேண்டும். புதுச்சேரி மேல் மத்திய அரசுக்கு அக்கறை இல்லை.இதன் மூலம் மத்திய அரசு புதுச்சேரி ஆட்சியாளர்களுக்கு நெருக்கமாக இல்லை என்பது தெளிவாகிறது. மக்களை ஏமாற்றி ஆட்சியில் அமர்ந்துள்ளது பாஜக. இதன் மூலம் புதுச்சேரியை பாஜக வஞ்சித்தது உறுதியாகிறது. ரங்கசாமி பாஜகவிடம் சரணாகதி அடைய கூடாது. புதுவையில் மின்துறையை தனியார் மயமாக்குவதை ரங்கசாமி தடுக்க வேண்டும். மழைக்கால நிவாரணம், தீபாவளிக்கு அறிவித்த அறிவிப்புகளை முதலமைச்சர் எப்போது நிறைவேற்றுவார். இதுதொடர்பாக புதுவை அரசு வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும். இவ்வாறு நாராயணசாமி கூறியுள்ளார்.
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்