விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே திருமண நிகழ்ச்சியில் மொய் பணம் நகை பையை திருடியவர்  கைது செய்து  அவரிடம் 1.31 லட்சத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். புதுச்சேரி மாநிலம் சேதராப்பட்டு பகுதியை சேர்ந்தவர் நாகமுத்து மகன் செல்வக் குமார் (வயது 39), இவரது தம்பி மணி மாறன் (வயது 27) என்பவருக்கு கடந்த வாரம் திருச்சிற்றம்பலம் பகுதியில் உள்ள தனியார் திருமண நிலையத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. அப்போது, மணி மாறனுக்கு வந்த மொய்  பணம் மற்றும் நகைகளை  வைத்துவிட்டு மேடையில் திருமண தம்பதிகளுடன் புகைப்படம் எடுக்க சென்றனர்.




ப்ளஸ் 2 மாணவர்-மாணவி மர்ம மரணம்: கோமுகி ஆற்றங்கரையோரம் சடலம் கண்டுபிடிப்பு!


இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு அங்கு விழாவில் வந்தவர்கள் மொய்  பணம் மற்றும்  தங்க நகைகளை மர்ம ஆசாமிகள் திருடிச் சென்றனர். புகைப்படம் எடுத்தபின் வந்து பார்க்கும் போது நாற்காலியில் வாய்த்த மொய் பணம் காணவில்லை. அதிர்ச்சி அடைந்த திருமண வீட்டார், இது குறித்து செல்வக்குமார், ஆரோவில் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, நகை, பணம் திருடிய ஆசாமியை தேடி வந்தனர். சி.சி.டி.வி., கேமிராவில் பதிவான காட்சிகளை வைத்தும் விசாரணை நடத்தி வந்தனர்.




இதற்கிடையே  தி.கூட்ரோடு சந்திப்பில் சப் இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜன் தலைமையிலான போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த நபரை மடக்கி விசாரணை நடத்தினர். விசாரணையில் கிளியனூர் அடுத்த நல்லாவூரை சேர்ந்த பரசுராமன் மகன் ஜெயச்சந்திரன், 30 என்பதும், தி.கூட்ரோட்டில் லாரி புக்கிங் சென்டர் நடத்தி வந்தது தெரிய வந்தது. மேலும், அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், கடந்த வாரம் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் வரிசை பணம், நகைகளை திருடியதும், தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால், முதல் முறையாக திருட்டில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. அதன் பேரில் போலீசார் அவரை கைது செய்து, ரூ. 1.31 லட்சம் மற்றும் மூன்று சவரன் நகைகளை பறிமுதல் செய்தனர்.


ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


 


 


 


 


 


 


 


பேஸ்புக் பக்கத்தில் தொடர


 


 


 


 


 


 


 


ட்விட்டர் பக்கத்தில் தொடர


 


 


 


 


 


 


 


யூட்யூபில் வீடியோக்களை காண