தெலுங்கானா மாநிலம் சித்திபேட் மாவட்டத்தில் 100 க்கு மேற்பட்ட நாய்கள் விஷ ஊசிப்போட்டு எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலம் சித்திபேட் மாவட்டம் ஜக்தேவ்பூர் மண்டலத்தில் உள்ள திகுல் கிராமத்தை சேர்ந்த ஒருவரின் வளர்ப்பு நாய் காணாமல் போயுள்ளது. இது பற்றி, அவர் பிராணிகள் நல அமைப்பிடம் புகார் செய்தார். இதனை அப்பகுதி மக்களும் உறுதிப்படுத்தினர். கிராமத்தின் பழமையான கிணற்றில் உடல்கள் வீசப்பட்டன. அந்த அமைப்பை சேர்ந்தவர்கள், கிராமத்தில் நாயை தேடிய போது, ஒரு பாழடைந்த கிணற்றில், எரிக்கப்பட்ட நிலையிலும், பல நாய்களின் உடல்கள் கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
இதுகுறித்து அந்த நபர் அளித்த புகாரின்படி, ஆறு வயதான தனது அன்பான நாய் இறந்த தகவல் கிடைத்ததை கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். நான் வளர்த்த நாயை போன்று இவ்வளவு நாய்களை எதற்காக கொன்றார்கள் என்று தெரியவில்லை என்று தெரிவித்துள்ளார்.
இது பற்றி அவர்கள் விசாரித்த போது, திடுக்கிடும் தகவல் வெளியானது. கில் தெருக்களில் தொல்லை அதிகம் இருந்துள்ளது. உடனே பஞ்சாயத்து தலைவர் தெரு நாய்களை பிடித்து கொல்லும்படி உத்தரவிட்டுள்ளனர். இதையடுத்து, நாய் பிடிப்பவர்கள் புகார் கொடுத்தவரின் நாய் உட்பட, தெருக்களில் சுற்றி திரிந்த 100க்கும் அதிக மான நாய்களை பிடித்து, அவற்றுக்கு விஷ ஊசி போட்டு கொன்றுள்ளனர். பின், நாய்களின் உடல்களை பாழடைந்த கிணற்றுக்குள் போட்டு தீ வைத்து எரித்ததும் விசாரணையில் தெரியவந்தது.
கடந்த மூன்று மாதங்களில் இப்பகுதியில் 200 தெருநாய்கள் கொல்லப்பட்டதாக உள்ளூர்வாசிகள் பிராணிகள் அமைப்பினரிடம் தெரிவித்தனர். இதனுடன், தொடர்ந்து நாய்கள் படுகொலை செய்யப்படுவதை எதிர்த்து மக்கள் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்யவும், உள்ளூர் சர்பஞ்ச் மீது நடவடிக்கை எடுக்க தெலுங்கானா முதல்வரிடம் மனு அளிக்க இருப்பதாகவும் பிராணிகள் பாதுகாப்பு அமைப்பினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
சித்திப்பேட்டை மாவட்டம் தெருநாய்களை கொன்று குவிப்பது இது முதல் முறை அல்ல. இதற்கு முன், 2019ல், சித்திப்பேட்டையில் நகராட்சி அதிகாரிகள், 100க்கும் மேற்பட்ட நாய்களை கொன்றது, விலங்கு பிரியர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
"சூப்பர் ஸ்டார்கிட்ட இருந்து இந்த விஷயத்தை கற்றுக்கொண்டேன் “ - நடிகர் முனிஷ்காந்த்!
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்