தமிழ் , தெலுங்கு , மலையாளம் , இந்தி மொழி திரைப்படங்களில் பிரபலமான தயாரிப்பாளராக இருப்பவர் தனஞ்செயன். இவர் Utv என்னும் தயாரிப்பு நிறுவனம் சார்பில் தமிழில் ராமன் தேடிய சீதை, பூ, கண்டேன் காதலை , அஞ்சான், இறுதிச்சுற்று, முகமூடி உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ளார். இது தவிர ட்விட்டரில் செம ஆக்டிவாக சினிமா குறித்த அப்டேட்டுகளையும் , சினிமா விமர்சனங்களையும் பதிவிட்டு வருகிறார். இவர் பல மொழி படங்களில் வேலை செய்திருந்தாலும் தனக்கு மிகவும் பிடித்தமான நடிகர் விஜய்தான் என்கிறார். அதற்கான காரணம் என்ன என்பது குறித்து சித்ரா லக்ஷ்மணன் உடனான நேர்காணல் ஒன்றில் பகிர்ந்திருக்கிறார்.
அதில் தனஞ்செயன் கூறியதாவது :
“விஜய் சாரை எனக்கு ரொம்ப பிடிக்கும் . என்னை சிலர் விஜய்யின் சொம்பு என்றெல்லாம் கூட கூறுவார்கள். ஆனால் அப்படியல்ல. நான் பார்த்து ஆச்சர்யப்படும் நடிகர் விஜய் சார். நிறைய பேரை சந்திச்சிருக்கேன். U tv ல இருக்கும் பொழுது அவருடன் ஒரு படம் பண்ணுறதுக்கான வாய்ப்பு கிடைத்தது. அது மிஸ் ஆனதுக்கு சில கார்பரேட் காரணங்கள் உண்டு. ஆனால் தனிப்பட்ட முறையில் நான் எப்படி மற்றவர்களை அணுகுவேன். எப்படி பேசுகிறேன் என்பதை நன்கு புரிந்தவர் அவர். கொரோனா காலக்கட்டதில் கூட அவரை சந்தித்தேன். சினிமா குறித்தான வீடியோ யாரெல்லாம் ஷேர் செய்யுறாங்களோ.. அதை எல்லாம் தினமும் பார்ப்பாரு. ஆழமாக நேசித்து எல்லா வீடியோவை பார்த்து சினிமாவை தெரிஞ்சுக்குறாரு. நாமெல்லாம் பேசிதான் மற்றவர்களை கவர முடியும் என நினைக்கிறோம். ஆனால் அவர் பேசாமலேயே கவர்ந்துவிடுகிறார். பேச ஆரமித்தால் ஜாலியா பேசுவாரு. ரொம்ப பக்குவமானவர் விஜய். தேவைப்படும் பொழுது பேசினால் போதும், தேவையில்லாமல் ஏன் பேசனும் என்பதுதான் அவரது கொள்கை. 46 வயதுக்குள் அவருக்கு இருக்கும் மெச்சூரிட்டி அதிகம். ஒரு செயலை தொடங்கும் பொழுது தேவையில்லாத விமர்சனம் வரும் என கூறினால் , அதற்கு விஜய் சார் கொடுக்கும் பதில் இல்லை சார் நான் இதெல்லாம் சின்ன வயசுல இருந்தே பார்த்துட்டேன். எனக்கு விமர்சனங்கள் குறித்து கவலை இல்லை. நீங்கள் யாரும் என்னால் விமர்சனங்களை எதிர்க்கொள்ளக்கூடாது என்பதிலும் கவனமாக இருப்பார். அவருடைய மெச்சூரிட்டிதான் இன்றைக்கு அவரை உச்ச நடிகராக அங்கீகரித்திருக்கிறது“ என தெரிவித்துள்ளார்.