NEET Exam Date : நாடு முழுவதும் ஜூலை 17-ந் தேதி நீட் நுழைவுத்தேர்வு

NEET EXAM : மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வு வரும் ஜூலை 17-ந் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Continues below advertisement

மருத்துவ படிப்புகளான எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். ஆகிய படிப்புகளுக்கு மத்திய அரசால் நீட் நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. நடப்பாண்டிற்கான நீட் நுழைவுத்தேர்வு வரும் ஜூலை மாதம் 17-ந் தேதி நடத்தப்படும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்திருக்கிறது. நீட் தேர்வு எழுதுவதற்காக மாணவர்கள் அனைவரும் நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் இந்த தேர்வு தமிழ், ஆங்கிலம், இந்தி உள்பட 13 மொழிகளில் நடத்தப்பட உள்ளது. நீட் தேர்வு எழுதுவதற்கு நாளை முதல் வரும் மே 7-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

Continues below advertisement
Sponsored Links by Taboola