Beer Price Hike: பீர் ப்ரியர்களே.. அதிரடியாக உயர்ந்த விலை! எவ்வளவு தெரியுமா?

Telangana Beer Price Increase: தெலங்கானாவில் பியர் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Continues below advertisement

தெலங்கான மாநிலத்தில் பியர் (Beer) விலை 15 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது.

Continues below advertisement

நாட்டில் பியர் நுகர்வு அதிகம் இருக்கும் மாநிலமான தெலங்கானாவில், பியர் விலையை உயர்த்த அனுமதி அளிகக் வேண்டும் என மதுபானம் விற்பனை செய்யும் நிறுவனங்கள் கோரிக்கை விடுத்திருந்தன. தெலங்கானா அரசிடமிருந்து எந்தவித பதிலும் தெரிவிக்காததால் ’Heineken - United Breweries’ என்ற நிறுவனம் பீர் விநியோகத்தை  நிறுத்தியது. 

’Kingfisher' பீர் தயாரிக்கும் நிறுவனமான United Breweries என்பது விலை உயர்வு கோரிக்கை ஏற்கபடாமல் இருந்ததால் விற்பனையை நிறுத்தியது. இதனைதொடர்ந்து, தெலங்கானா அரசு பீர் விலையை அதிகரிக்க அனுமதி அளித்தது. 

பிரபலமான கிங்ஃபிஷர், கிங்பிஷர் ஸ்ட்ராங், கிங்ஃபிஷர் அல்ட்ரா, கிங்ஃபிஷர் அல்ட்ராமேக்ஸ் போன்ற பிரபலமான பீர் ப்ராண்டுகளை யுனைடெட் ப்ரூவரீஸ் தயாரிக்கிறது. மேலும் 2019-20 ஆம் ஆண்டிலிருந்து அவர்களின் பீரின் அடிப்படை விலையை மாற்றவில்லை என்பதால் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளாதாக தெரிவித்திருந்தது. ஜனவரி,8,2025 ம் ஆண்டு நிதி நெருக்கடி காரணமாக விற்பனையை நிறுத்துவதாக அறிவித்திருந்தது. 

உலக அளவில் மதுபான சந்தையில் இந்தியா எட்டாவது மிப்பெரிய நாடாகும். ஒவ்வொரு மாநிலமும் மதுபான விலையை  நிர்ணயம் செய்கின்றன.  மதுபான விற்பனை மூலம அரசுக்கு வருமானமும் கிடைக்கிறது. தெலங்கானாவில் அரசு விநோயகஸ்தர்களிடம் இருந்து மதுபானத்தை பெற்று விற்பனை செய்கிறது. 

இந்நிலையில், பியர் விலை 11, பிப்ரவரி முதல் 15% உயர்த்தப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. புதிய விலையில் விற்பனை செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


மேலும் வாசிக்க..

ஜனநாயகனுக்கு முன்பு ரிலீசாகும் விஜய்யின் மற்றொரு படம்! குஷியில் தளபதி ரசிகர்கள்!

Thaipusam 2025: பழனியிலே பஞ்சாமிர்தத்திற்கு தட்டுப்பாடு! தைப்பூச நன்னாளில் பக்தர்களுக்கு சோதனை!

Continues below advertisement