ஜனநாயகனுக்கு முன்பு ரிலீசாகும் விஜய்யின் மற்றொரு படம்! குஷியில் தளபதி ரசிகர்கள்!

Vijay Sachein Movie Re-release: விஜய் நடிப்பில் கடந்த 2005ம் ஆண்டு வெளியான சச்சின் படம் வரும் கோடை விருந்தாக மீண்டும் ரிலீஸ் செய்யப்பட உள்ளது. இதனால், விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Continues below advertisement

Vijay Sachein Movie Re-release: தமிழ் திரையுலகின் உச்சநட்சத்திரமாக திகழ்பவர் நடிகர் விஜய். விஜய் தமிழக வெற்றிக் கழகத்தைத் தொடங்கிய பிறகு நடிப்பில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அவரது அறிவிப்பு அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது. 

Continues below advertisement

விஜய்யின் கடைசி படம்:

அவரது நடிப்பில் அவரது கடைசித் திரைப்படமாக ஜனநாயகன் உருவாகி வருகிறது. இந்த படம் எப்போது ரிலீசாகும் என்று இதுவரை அறிவிக்கப்படவில்லை. இந்த நிலையில், விஜய் நடிப்பில் உருவாகி அவரது ரசிகர்கள் மத்தியில் ஃபேவரைட் படமாக தற்போது வரை திகழும் சச்சின் படம் மீண்டும் வெளியிடப்பட உள்ளது. 

சச்சின் ரீ ரிலீஸ்:

இந்த படம் கோடை விருந்தாக ரிலீசாகும் என்று படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு சற்று முன் அறிவித்துள்ளார். விஜய் நடிப்பில் முழுக்க முழுக்க கல்லூரி காதலை மையமாக வைத்து வெளியான படம் சச்சின். மிகவும் துள்ளலான நகைச்சுவை கலந்த காதல் படமாக இந்த படம் உருவாகியிருக்கும். 

இந்த படத்தின் ரிலீஸ் தேதி தற்போது அறிவிக்கப்படவில்லை. சச்சின் படம் கடந்த 2005ம் ஆண்டு ரிலீசான படம். இந்த படம் வெளியாகி 20 ஆண்டுகள் வெளியானதை கொண்டாடும் விதமாக தற்போது ரீ ரிலீஸ் செய்யப்படுகிறது.  சச்சின் படத்தை பிரபல இயக்குனர் மகேந்திரனின் மகன் ஜான் மகேந்திரன் இயக்கியிருப்பார். இந்த படத்திற்கு ஜீவா ஒளிப்பதிவு செய்திருப்பார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருப்பார். விடி விஜயன் ஒளிப்பதிவு செய்திருப்பார். 

ரசிகர்கள் மகிழ்ச்சி:

விஜய்யின் கடைசி படம் தற்போது உருவாகி வரும் சூழலில், நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படம் சச்சின் மீண்டும் ரிலீஸ் ஆக இருப்பது அவரது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக அமைந்துள்ளது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஜெனிலியா நடித்திருப்பார். அவருடன் வடிவேலுவும் கல்லூரி மாணவராக நடித்திருப்பார். படத்தில் விஜய் - ஜெனிலியா காட்சிகளுக்கு இணையாக, வடிவேலுவின் நகைச்சுவை காட்சிகள் மிகவும் பலமாக படத்திற்கு அமைந்திருக்கும். 

விஜய் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற கில்லி படம் கடந்தாண்டு ரீ ரிலீஸ் செய்யப்பட்டு மாபெரும் வெற்றி பெற்றது. இந்த நிலையில், மீண்டும் விஜய்யின் திரைப்படம் ஒன்று ரீ ரிலீஸ் செய்யப்படுவது அவரது ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தினரும் விஜய்யின் சச்சின் ரி ரீலீசை கொண்டாடி வருகின்றனர். 

ஜனநாயகன் எப்போது?

விஜய் நடிப்பில் உருவாகி வரும் அவரது கடைசித் திரைப்படம் ஜனநாயகன் இந்தாண்டு வெளியாகாவிட்டால் அவர் நடிக்க வந்தது முதல் அவரது திரைப்படம் ரிலீசாகாத ஆண்டு இந்தாண்டாக மட்டுமே அமையும். அந்த குறையை நிவர்த்தி செய்யும் விதமாகவே இளைஞர்கள் மற்றும் குடும்பத்தினரை இழுக்கும் விதத்தில் சச்சின் படத்தை ரீ ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. 

Continues below advertisement