புதிய தாழ்தள மின்சார பேருந்துகளுக்கு டெண்டர்!
மாநகர போக்குவரத்து கழகத்தில் 600 தாழ்தள மின்சார பேருந்துகள் கொள்முதல் , பயன்பாடு, பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள தமிழ்நாடு அரசு சார்பில் டெண்டர் கோரபட்டுள்ளது. மார்ச் 10ம் தேதி முதல் விருப்பமுள்ள தனியார் நிறுவனங்கள் இணையதளத்தில் டெண்டர் கோரலாம். ரூ.3 கோடி முன்வைப்பு தொகை செலுத்தி, ஏப்ரல் 4ம் தேதிக்குள் ஒப்பந்த புள்ளி அளிக்க வேண்டும் என அறிவிப்பு.
விண்ணை முட்டும் தங்கம் விலை
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ஒரே நாளில், ரூ.640 உயர்ந்து இதுவர இல்லாத புதிய உச்சமாக ரூ.64480க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை 80 ரூபாய் அதிகரித்து, 8 ஆயிரத்து 60 ரூபாயாக உயர்ந்துள்ளது.
அறுபடை வீடுகளில் குவிந்த மக்கள்
தைப்பூசத்தை ஒட்டி முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில், பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. சிறப்பு அலங்காரத்தில் தோற்றமளித்த முருகனை கண்டதும், பக்தர்கள் அரோகரா முழக்கங்களை எழுப்பி உற்சாகம்.
ஃப்ரான்ஸில் பிரதமர் மோடி
இரண்டு நாள் பயணமாக ஃப்ரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து, அந்நாட்டு அதிபர் இமானுவேல் மேக்ரான் ஆரத்தழுவி மோடியை வரவேற்றார். இன்று நடைபெற உள்ள செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் தொடர்பான மாநாட்டிலும் அவர் பங்கேற்க உள்ளார்.
காங்கிரசுக்கு நோ - மம்தா பானர்ஜி
மேற்கு வங்காளத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில், ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் தனித்தே போட்டியிடும் என அக்கட்சித்தலைவரும்,முதலமைச்சருமான மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். மேலும், மேற்கு வங்காளத்தில் காங்கிரஸ் இல்லை. நான் தனித்தே போட்டியிடுவேன். நாம் மட்டுமே போதும்' எனவும் பேசியுள்ளார்.
மகா கும்பமேளா - 7000 பெண்கள் துறவறம்
இதுவரை 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் மகா கும்பமேளா விழாவில் திரிவேணி சங்கமத்தில் நீராடி சந்நியாச தீட்சை எடுத்துள்ளனர். அவர்கள் சனாதனத்திற்கு சேவை செய்வதாக உறுதிமொழி எடுத்துள்ளனர். துறவறம் பூண்ட பெண்கள் பெரும்பாலானோர் உயர்கல்வி பயின்றவர்கள் - உத்திரபிரதேச அரசு
22 லட்சத்திற்கு ஏலம் போன ஹாரி பாட்டர் புத்தகம்!
இங்கிலாந்து: குப்பையில் கண்டெடுக்கப்பட்ட ஹாரி பாட்டர் நாவலின் முதல் பதிப்பு புத்தகம் சுமார் ₹22 லட்சத்திற்கு ஏலம் போனது. ஏலம் நடத்தும் டேனியல் பியர்ஸ் என்பவர், உயிரிழந்த ஒருவரின் JJ உடைமைகளுடன் இப்புத்தகத்தைக் கண்டெடுத்துள்ளார். 500 புத்தகங்களே அச்சிடப்பட்டதால், இது அரிதாக கருதப்படுகிறது.
ஹமாஸிற்கு கெடு விதித்த ட்ரம்ப்:
காசாவில் பிடித்து வைக்கப்பட்டு உள்ள பணய கைதிகள் அனைவரும் வரும் சனிக்கிழமை மதியத்திற்குள் விடுதலை செய்யப்பட வேண்டும். அப்படி அவர்கள் விடுவிக்கப்படவில்லை என்றால், இஸ்ரேல் உடனான போர்நிறுத்த ஒப்பந்தத்தினை ரத்து செய்து விடுவேன் - அமெரிக்க அதிபர் ட்ரம்ப்
ஹாட்ரிக் வெற்றியா?
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி, நாளை அகமதாபாத்தில் நடைபெற உள்ளது. அதிலும் வென்று, தொடரை முற்றிலும் கைப்பற்ற இந்திய அணி தீவிரம் காட்டுகிறது. உள்ளூர் நேரப்படி பிற்பகல் 1.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது.
சாம்பியன்ஸ் ட்ராபி - பும்ரா அவுட்டா?
ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி போட்டியில் இந்திய அணி வீரர் பும்ரா களமிறங்குவாரா? மாட்டாரா? என பிசிசிஐ இன்று இறுதி செய்யும் என தகவல் வெளியாகியுள்ளது. ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது ஏற்பட்ட காயம் காரணமாக, பும்ரா முதுகு வலியால் அவதிப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.