ஏர் இந்தியா நிறுவனம் இந்திய அரசிடம் இருந்து மீண்டும் டாட்டா நிறுவனத்திடம் கைமாறியது. இந்நிலையில் ஏர் இந்தியாவின் புதிய சிஇஓவாக இல்கர் அய்சியை டாடா நிறுவனம் நியமித்துள்ளது. இவர் துருக்கி ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் தலைவராக இதற்கு முன்பாக பணியாற்றியுள்ளார். 


டாடா நிறுவனத்தின் செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. அந்தக் கூட்டம் ஏர் இந்தியாவின் புதிய தலைமை செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநரை தேர்ந்தெடுக்க நடைபெற்றது. அதில் ஏர் இந்தியாவின் தலைமை செயல் அதிகாரியாக இல்கர் அய்சியை நிர்வாகிகள் தேர்ந்தெடுத்துள்ளனர். 


 






துருக்கி நாட்டின் இஸ்தான்புல் பகுதியில் 1971ஆம் ஆண்டு இவர் பிறந்துள்ளார். 1994ஆம் ஆண்டு பில்கென்ட் பல்கலைக்கழக்கத்தில் அரசியல் அறிவியல் தொடர்பான பட்டப்படிப்பை முடித்துள்ளார். அதன்பின்னர் லண்டன் லீட்ஸ் பல்கலைக்கழக்கத்தில் 1995ஆம் ஆண்டு ஒரு ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தார். அதைத் தொடர்ந்து 1997ஆம் ஆண்டு  மர்மரா பல்கலைக் கழகத்தில் இவர் சர்வதேச உறவுகள் தொடர்பாக  பட்டப்படிப்பை முடித்துள்ளார். அதன்பின்னர் இவர் துருக்கியில் பல தொழில்களை தொடங்கினார். 2015ஆம் ஆண்டு துருக்கு ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டிருந்தார்.  இந்தப் பதவியை கடந்த மாதம் 26ஆம் தேதி அவர் ராஜினாமா செய்தார். இந்தச் சூழலில் தற்போது இவர் ஏர் இந்தியா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். 


இதுகுறித்து இல்கர் அய்சி, "ஏர் இந்தியா மற்றும் டாட்டா குழுமத்துடன் இணைவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது. ஏர் இந்தியா ஊழியர்களுடன் இணைந்து பணியாற்றி அதை சிறப்பான ஒரு விமானமாக மாற்ற பாடுபவேன். உலகத்திலேயே மிகச் சிறந்த விமானமாக ஏர் இந்தியாவை மாற்ற அனைத்து பணிகளையும் மேற்கொள்ள உள்ளேன்" எனத் தெரிவித்துள்ளார். 




ஏர் இந்தியா நிறுவனத்தின் சிஇஓவாக இல்கர் அய்சி வரும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் பதவியேற்க உள்ளார். ஏர் இந்தியா நிறுவனத்தை கடந்த 1932ஆம் ஆண்டு ஜே.ஆர்.டி டாட்டா தொடங்கினார். 1953ஆம் ஆண்டு ஏர் இந்தியா நிறுவனம் தேசியமயமாக்கப்பட்டது. அதன்பின்னர் தற்போது மீண்டும் அதன் பங்குகளை அரசி விற்பனை செய்தது. அதில் ஏர் இந்தியாவை டாட்டா நிறுவனம் மீண்டும் வாங்கியது. இதைத் தொடர்ந்து கடந்த மாதம் டாட்டா நிறுவனம் மீண்டும் ஏர் இந்தியாவை நிர்வாகிக்கும் உரிமையை பெற்றது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க: “ராகுல்காந்தி கேட்டத்தில் தவறில்லை.. நான் கேட்கிறேன்” - சர்ஜிகல் ஸ்டிரைக் குறித்து கேசிஆர் கேள்வி