தமிழ்நாடு, இந்தியா மற்றும் மற்ற நாடுகாளில் கடந்த 24 மணி நேரங்களில் நடைபெற்ற முக்கிய அரசியல்- சமூக நிகழ்வுகளின் தொகுப்பை இங்கே காணலாம்.        


1. தமிழ்நாட்டில் இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலானது. மளிகை, காய்கறி, பலசரக்கு, இறைச்சி, மீன் விற்பனை கடைகள் காலை 6 மணி முதல் காலை 10 மணி வரை மட்டுமே இயங்கும். ஏடிஎம் மையங்கள், பெட்ரோல் நிலையங்கள் எப்போதும் போல் செயல்படும்.


2. கொரோனா நோயாளிகளை அழைத்து செல்ல தனியார் ஆம்புலன்ஸ்க்கு கட்டணம் நிர்ணயம் - தமிழக சுகாதார துறை அறிவிப்பு


3.அரசு ஊழியர்களுக்கான ஈட்டிய விடுப்பு ஊதியம் ஓராண்டுக்கு நிறுத்தி வைப்பு - தமிழக அரசு அரசாணை வெளியீடு


4.தமிழகத்தில் காத்திருப்போர் பட்டியலில் இருந்தவர்கள் உள்பட 15 ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சென்னை மாநகர முன்னாள் காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால், சென்னை குற்றப்பிரிவு ஏ.டி.ஜி.பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.


5.இந்தியாவில் ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி கொரோனா தடுப்பூசி நேற்று முதல் செலுத்தப்பட்டவருகிறது. இதுவும் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் போல் இரண்டு டோஸ் செலுத்தப்பட வேண்டிய தடுப்பூசி ஆகும்.


6. பள்ளிகளில் கொரோனா சிகிச்சை மையங்களை தயார் நிலையில் வைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.


7. கோவா அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் இன்றி நான்கு நாள்களில்  75 பேர் உயிரிழப்பு.


8. கேரளாவில் முழு ஊரடங்கு மே 23ஆம் தேதி வரை நீட்டித்து அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளார்.


9. சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள கொரோனா வார் ரூமில் நேற்றிரவு 11 மணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.  பொதுமக்களிடம் இருந்து வந்த அழைப்புகளை ஏற்று அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து உடனே நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார்,


10. இஸ்ரேல் - ஹமாஸ் இடையே தொடரும் மோதலில் இதுவரை காசா முனையில் 126 பேரும், இஸ்ரேசில் 7 பேரும் உயிரிழந்துள்ளனர்.